கொழும்பில் நடைபெறவுள்ள கால்பந்து மினி உலகக் கிண்ணப் போட்டிகள்

846
Football Mini World Cup

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகம் மற்றும் தாபித் அஹ்மத் கால்பந்து பயிற்சியகம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள முதலாவது கால்பந்து மினி உலகக் கிண்ணப் போட்டிகள், கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளன.   

16 வயதுக்குட்டப்பட்ட மகளிர் மற்றும் ஆடவர் பிரிவுகளில் நடைபெறவுள்ள குறித்த போட்டிகளானது, பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளன. இதில் யாழ்ப்பாணம், கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து 8 மகளிர் அணிகளும் 8 ஆடவர் அணிகளும் பங்குபற்றவுள்ளன.  

FA கிண்ண இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ஜாவா லேன் மற்றும் இராணுவ அணிகள்

அந்த வகையில் பங்குபற்றும் ஒவ்வொரு அணியும் அனுசரணை வழங்கும் சுவிட்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, பிரேசில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க தூதரகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த தொடர் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹட் கருத்து தெரிவிக்கையில், முக்கியமாக இந்த அணிகளுக்கு இது ஒரு நல்லதொரு அனுபவமாக இருக்கப்போகின்ற அதேநேரம், நாட்டிலுள்ள வெவ்வேறான பிரதேசங்களிலுள்ள சிறுவர், சிறுமிகளை ஓன்று சேர்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமையவுள்ளது.

நான் இங்கு இருக்கும் வரை இது போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். கால்பந்து விளையாட்டானது சகல மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டாகும்என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், கால்பந்து விளையாட்டானது, உலகத்திலுள்ள பிரபல விளையாட்டாகும். அந்த வகையில், இந்த போட்டிகள் இலங்கை மக்கள் மத்தியில் இவ்விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த பங்களிப்பு செய்யும் என்று தெரிவித்தார்.

அதேநேரம், ஜேர்மன் தூதரகம் மற்றும் தாபித் அஹ்மத் கால்பந்து பயிற்சியகம் இணைந்து இதற்கு முன்னதாக பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை வடக்கு பிரதேசத்தில் நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், 2016ஆம் ஆண்டு தாபித் அஹ்மத் கால்பந்து பயிற்சியக அனுசரணையில் நடைபெற்ற பல செயலமர்வுகளுக்கு ஜேர்மன் தூதரகம் பின்னின்றன. அத்துடன், கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல்வேறான கலாசார நிகழ்ச்சிகளை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

தாபித் அஹ்மத் கால்பந்து கல்வியக ஸ்தாபகர் தாபித் அஹ்மத் இந்த போட்டிகள் குறித்து விளக்கமளிக்கும்பொழுது, ”கடந்த பெப்ரவரி மாதம் ஜேர்மனின் அனுசரணையுடன் வடக்கு பிரதேசத்தில் திட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம். இரண்டு வாரங்களுக்குள் 4000 சிறுவர்களை சென்றடைந்தோம். அந்த வகையிலேயே இந்த மினி உலகக் கிண்ணமும் நடைபெறவுள்ளது. கடந்த முறை யாழ்ப்பாணத்தில் வென்ற அணியும் கொழும்புக்கு வரவுள்ளது. இந்த உலகக் கிண்ண போட்டிகள் ஜேர்மன் தூதரின் யோசனையாகும். மேலும், இது சகல இன மக்களையும் இணைக்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது” என்றார்.  

2ஆவது இளையோர் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக 12 பேர்

ஒவ்வொரு போட்டிகளும் தொடர்ந்து 12 நிமிடங்களுக்கு நடைபெறவுள்ளது. இடைவேளைக்கு 6 நிமிடங்கள் வழங்கப்படும். இரண்டு கால்பந்து மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

போட்டிகளின் நிறைவில் இரு பிரிவுகளிலிருந்தும் சிறந்த வீரருக்கான விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. பங்குபற்றும் அணிகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காக கொழும்பு ஹில்டன் ஹோட்டல்எலிஃபண்ட் ஹவுஸ் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் உணவு மற்றும் பானங்களையும் வழங்கவுள்ளன.