பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் வரை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலிருந்து பாபர் அசாம் விலகல்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் …
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க வீரரான அஹமட் ஷேசாதிடம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண்ண முதல்தர ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்படி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் மரிஜுவானா என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது உறுதியாகி உள்ளது.
எனவே, ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு 3 மாதங்கள் போட்டித் தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் உறுதி செய்யாதவரை, வீரரின் பெயரை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது. எனினும், இன்னும் இரண்டு நாட்களில் ஊக்கமருந்தை பயன்படுத்திய வீரர் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாற்றத்தைத சந்தித்து வரும் அஹமட் ஷேசாத், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரில் கைபர் பக்துன்க்வா அணிக்காக விளையாடியிருந்தார்.
MCC அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன
கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் …
குறித்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 372 ஓட்டங்களைக் குவித்த அவர், அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பதிவு செய்தார்.
இதனையடுத்து, கடந்த மாதம் ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற டி-20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஷேசாத், முறையே 14 மற்றும் 24 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே, அவுஸ்திரேலிய அணிகளுடனான முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணியின் உத்தேச குழாத்தில் அஹமட் ஷேசாத் இடம்பெற்றிருந்தார். எனினும், தற்போது அவருக்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் இழக்கவுள்ளார்.
இதன் காரணமாக, மொஹமட் ஹபீஸ் மற்றும் ஷான் மசூத் ஆகிய வீரர்கள் பாகிஸ்தான் டி-20 அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கலாம் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு நாள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவுக்கு வரலாற்று பின்னடைவு
ஐ.சி.சி இன் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு …
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அஹமட் ஷேசாத், இதுவரை 13 டெஸ்ட், 81 ஒரு நாள் மற்றும் 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக கிரிக்கெட் அரங்கில் மைதானத்திற்குள்ளேயும், வெளியேயும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, சூதாட்ட சர்ச்சைகளில் சிக்குவது, விளையாட்டு சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையான முறையில் செயற்படுவது போன்ற விடயங்களில் பாகிஸ்தான் முன்னிலை அணியாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை.
அதிலும் குறிப்பாக, ஊக்கமருந்து சர்ச்சையில் அந்நாட்டு வீரர்கள் சிக்குவது அரிதாக இருந்தாலும், அவ்வணியின் முன்னாள் வீரர்களான சொஹைப் அக்தார், மொஹமட் ஆசிப், அப்துல் ரஹ்மான் மற்றும் ரிஸா ஹசன் போன்றோர் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கி போட்டித் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் கடந்த 2016ஆம் ஆண்டு அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா உக்கமருந்து பயன்படுத்தியமை தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு 3 மாதங்கள் போட்டித் தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…