லெய்செஸ்டர் சிட்டி அணி உரிமையாளரின் ஹெலி விபத்து

114

லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் உரிமையாளர் விசாய் சிறிவத்தனபிரபாவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அந்தக் கழக வாகனத் தரிப்பிடத்தில் மோதி பாரிய தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பிரீமியர் லீக் போட்டி ஒன்றுக்கு பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

பிரீமியர் லீக் முதலிடத்திற்கு போராடும் சிட்டி, லிவர்பூல், செல்சி அணிகள்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது வாரத்தின் மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றன. இதில்…….

இந்த ஹெலி விபத்திற்கு உள்ளாகும்போது சிறிவத்தனபிரபா அதில் இருந்ததாக அவரது குடும்பத்தினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.  

லெய்செஸ்டர்  சிட்டி வீரர் காஸ்பர் ஸ்மெய்கல் மைதானத்தில் இருந்த விபத்து இடம்பெற்ற பகுதியை நோக்கி ஓடியதை பார்த்ததாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். போட்டி முடிவடைந்து ஒரு மணித்தியாலத்தில் மைதானத்தில் இருந்து நெருங்கிய தொலைவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மைதானத்திற்கு மேலால் எழுந்த ஹெலிகொப்டர் வேகமாக சுழல ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அது தரையை நோக்கி விழுந்து தீப்பிழப்பு எழுந்துள்ளது.  

விபத்து இடம்பெற்ற கிங் பவர் அரங்கில் நடைபெற்ற லெய்செஸ்டர் சிட்டி மற்றும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமனிலையில் நிறைவடைந்தது.

இப்ராஹிம் ஜிமோஹ்வின் ஹெட்ரிக் கோலால் பெலிகன்ஸை வீழ்த்திய ரினௌன்

பெத்தகான விளையாட்டு மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ரினௌன் அணி தனது ஆரம்ப……..

சிறிவத்தனபிரபாவின் உரிமையின் கீழ் லெய்செஸ்டர் சிட்டி அணி 2016 பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதோடு இம்முறை அந்த அணி வெற்றி வாய்ப்பை பெரும்பாலும் இழந்த நிலையிலேயே காணப்படுகிறது.  

2010 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் அணியை வாங்கிய சிறிவத்தனபிரபா தாய்லாந்தின் ஐந்தாவது மிகப் பெரிய செல்வந்தர் என போர்ப்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டொலர்களாகும்.  

லெய்செஸ்டர் கழகம் மீது மில்லியன் பௌண்ட்கள் வரை செலவிட்ட அவர் அந்த அணியை பலம் கொண்ட அணியாக மாற்ற உதவினார். 2014 ஆம் ஆண்டாகும்போதும் இங்கிலாந்து சம்பியன் அணிகளான மன்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் மற்றும் செல்சி போன்ற அணிகளை வீழ்த்த அந்த அணியால் முடிந்தது.