மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்தார் மாலிங்க

2049

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியுடன் நாடு திரும்பியிருந்த இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11)…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 20வது லீக் போட்டி இன்று (15) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு இலண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான முக்கிய வேகப் பந்துவீச்சாளராக எதிர்பார்க்கப்படும் லசித் மாலிங்க, கடந்த 11ம் திகதி கைவிடப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர், நாடு திரும்பினார். மாலிங்கவின் மனைவியின் தாயார் உயிரிழந்ததைத் தொடர்ந்தே மாலிங்க நாடு திரும்பியிருந்தார்.

தற்போது, தனது கடமைகளை நிறைவேற்றிய மாலிங்க மீண்டும் லண்டனை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற லசித் மாலிங்க நேற்றிரவு 8.00 மணியளவில் இலண்டனை சென்றடைந்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த 11ம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் இலங்கை வந்த மாலிங்க, இதுவரையில் ஆஸிக்கு எதிரான போட்டிக்கான இலங்கை அணியின் பயிற்சிகளில் பங்கேற்றிருக்கவில்லை. ஆனாலும், மாலிங்கவின் அனுபவம் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் தேவைகளின் அடிப்படையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் 23 வருட பதிவை மாற்றுமா இலங்கை – ஆஸி மோதல்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட்…

அதேநேரம், லசித் மாலிங்க மற்றும் உபாதைக்குள்ளாகியிருந்த நுவான் பிரதீப் ஆகியோர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளைாயடுவர் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஊடகங்களிடம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதுடன், குறித்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாலிங்க மற்றும் நுவான் பிரதீப் இருந்தனர்.  குறித்த போட்டியில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், மாலிங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<