மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவது தொடர்பில் குசல் பெரேரா!

Lanka Premier League 2023

426

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ள ஓரா அணியில் விளையாடி வரும் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா மீண்டும் இலங்கை அணிக்கு திரும்புவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிபையர் போட்டியில் தம்புள்ள ஓரா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னுறியுள்ளது.

>> முதன்முறையாக LPL இறுதிப்போட்டியில் தம்புள்ள ஓரா!

குறித்த இந்த குவாலிபையர் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்திய குசல் பெரேரா, 39 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

தேசிய அணியின் முன்னணி வீரரான குசல் பெரேரா நியூசிலாந்துக்கு எதிரான T20i தொடரில் விளையாடியிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இவ்வாறான நிலையில், அடுத்துவரும் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் இவர் இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான நிலையில் ஒருநாள் போட்டிக்கான மீள்வருகை தொடர்பில் குசல் பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார். முதல் குவாலிபையர் போட்டியை தொடர்ந்து கருத்து வெளியிட்ட இவர்,

மீண்டும் தேசிய அணிக்குள் நுழைவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் பெரிய திட்டங்களை வகுக்கவில்லை. காரணம் நான் கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

நான் எந்த போட்டிகளுக்கு திரும்பினாலும், என்னுடைய தன்னம்பிக்கை மற்றும் என்னை வலுப்படுத்திக்கொண்டு விளையாட எதிர்பார்ப்பேன். ஒருநாள் போட்டிகளுக்காக நான் தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. நான் வெள்ளை நிற பந்துகளில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். கழகமட்ட T20 மற்றும் மூன்று நாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனினும் நான் எப்போதும் என்மீது வைத்துள்ள தன்னம்பிக்கையின் அடிப்படையில் விளையாடுவேன்” என்றார்.

>> மூன்று தடவைகள் கிண்ணத்தை வென்ற ஜப்னாவை வெளியேற்றிய பி லவ் கண்டி! | LPL 2023

இதேவேளை இலங்கை T20i அணிக்காக இவர் ஆரம்ப மற்றும் மூன்றாவது இலக்க வீரராக விளையாடிவந்த போதும், தம்புள்ள ஓரா அணிக்காக நான்காவது இலக்கத்தில் விளையாடி வருகின்றார். இதுதொடர்பில் குறிப்பிட்ட இவர்,

நான்காவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவது புதிய அனுபவம். அணி எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளது. சர்வதேச போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் துடுப்பெத்தாடியுள்ளேன். இரண்டு போட்டிகளில் எனக்கு ஓய்வளிக்கப்பட்டது. அது அணியின் தீர்மானம். எனவே இந்த இடத்தை சவாலாக எடுத்துக்கொண்டு விளையாடினேன். நான் ஏற்கனவே கூறியது போன்று என்னுடைய பலத்தையும், தன்னம்பிகைகையும் வைத்து என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<