இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார

1009

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஹிரு குமார இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய இலங்கை வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும், கிரிக்கெட் வீரர்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளில் ஒன்றினை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாக முன்னரே லஹிரு குமார இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சுழல் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள இலங்கை

ஒருநாள் மற்றும் T20 தொடர்களின் தோல்விகளை விடுத்து, டெஸ்ட் தொடர் என்ற வகையில் பார்க்கும் போது

இதன்படி நாளை (06) ஆரம்பமாகவுள்ள இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு குமார விளையாடமாட்டார் என்பதனை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டுள்ள கீழ்வரும் அறிக்கை உறுதி செய்கின்றது.  

“ அணி முகாமைத்துவம் அவரை (லஹிரு குமாரவை) பிரதியீடு செய் முடிவு எடுத்துள்ளது. “  

வெறும் 21 வயதேயான லஹிரு குமார இதுவரையில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளதோடு, இந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் வெறும் 3 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லஹிரு குமார தற்போது நீக்கப்பட்டுள்ளதால் அவரின் இடத்தினை இலங்கை அணியில் துஷ்மந்த சமீர பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க