லா லிகா, புன்டஸ்லிகா பருவங்கள் அதிர்ச்சி முடிவுகளுடன் ஆரம்பம்

47

ஜேர்மனியின் புன்டஸ்லிகா மற்றும் ஸ்பெயினின் லா லிகா கால்பந்து பருவம் இந்த வாரம் ஆரம்பமானதோடு போட்டிகளின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி முடிவுகள் பதிவாகின.  

ப்ரீமியர் லீக்கில் லிவர்பூலின் வெற்றிப் பயணம் ஆரம்பம்

செயிண்ட் மேரிசில் நடைபெற்ற…

நடப்புச் சம்பியன் பார்சிலோனா இம்முறை லா லிகா பருவத்தை தோல்வியுடன் ஆரம்பித்தது. கடந்த வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற முதல் போட்டியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ பில்போவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் முன்னணி வீரர் லுவிஸ் சுவாரெஸ் காயத்தினால் வெளியேறியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் 38 வயதான அரிட்ஸ் அடுரிஸ் பெற்ற அதிர்ச்சி கோல் மூலம் பில்போ அணி வெற்றியீட்டிக்கொண்டது.  

இதேவேளை, லா லிகாவில் நேற்று (17) நடைபெற்ற மற்றொரு முக்கிய போட்டியில் ரியல் மெட்ரிட் இந்த பருவத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது. செல்டா விகோவுக்கு எதிரான அந்தப் போட்டியில் கரிம் பென்செமா, டோனி க்ரூஸ் மற்றும் லூகாஸ் வாஸ்குஸ் ஆகியோர் கோல்கள் பெற்று மெட்ரிட் அணியை வெற்றி பெறச் செய்தனர்.  

குறிப்பாக க்ரேத் பேல், ரியல் மெட்ரிட் அணியில் இருந்து வெளியேறுவது குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் 11ஆவது நிமிடத்தில் பென்செமா பந்தை வலைக்குள் செலுத்துவதற்கு அபாரமாக பந்தை பரிமாற்றியமை குறிப்பிடத்தக்கது.     

மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

கோப்பா அமெரிக்கா போட்டிகளில் ஊழல்…

இதேவேளை, புன்டஸ்லிகா பருவத்தில் தொடர்ச்சியாக 8ஆவது முறை சம்பியனாகும் இலக்குடன் களமிறங்கி இருக்கும் பயேர்ன் முனிச் தனது முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்ய தவறியது.  

ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான போட்டியில் வென்டோஸ்கி 24 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று பயேர்ன் அணியை முன்னிலை பெறச் செய்தபோதும் அடுத்த 12 நிமிடங்களில் ஹெர்தா பதில் கோல் திருப்பியது. இந்நிலையில், இரண்டு நிமிடங்கள் கழித்து அந்த அணி இரண்டாவது கோலையும் பெற பெயர்ன் நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. 

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் வைத்து கிடைத்த பெனால்டி மூலம் பெயேர்ன் அணியால் போட்டியை சமநிலை செய்ய முடிந்தது. 

பயேர்ன் அணியின் புள்ளிகள் குறைந்ததை அடுத்து பிருஷியா டோர்ட்முண்ட் தனது முதல் போட்டியில் கோல் மழை பொழிந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. அகஸ்பர்க் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டோர்ட்முண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<