மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

199
© Getty image

கோப்பா அமெரிக்கா போட்டிகளில் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டிய ஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆடுவதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஆர்ஜன்டீனா வென்ற போட்டியில் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை

கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரில் சிலி அணியை…….

கடந்த மாதம் முடிவுற்ற கோப்பா அமெரிக்க கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்திற்காக சிலியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜன்டீன அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றபோதும் அந்தப் போட்டியில் பார்சிலோனா முன்கள வீரரான 32 வயதுடைய மெஸ்ஸி சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், அந்தத் தொடரில் சம்பியன் கிண்ணம் பிரேசில் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்காக மெஸ்ஸிக்கு தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஏற்கனவே 50,000 டொலர் அபராதத்தையும் விதித்தது. இந்நிலையிலேயே அவருக்கு தற்பொழுது 3 மாத போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தன் மீதான தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு மெஸ்ஸிக்கு ஏழு நாட்கள் உள்ளன. இந்த தடை காரணமாக வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆர்ஜன்டீனாவின் சிலி, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு எதிரான நட்புறவு போட்டிகளில் மெஸ்ஸிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

2022 உலகக் கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீனாவின் தகுதிகாண் போட்டிகள் 2020 மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ விளையாடாததற்கு எதிராக வழக்கு தொடரும் ரசிகர்கள்

தென் கொரியாவில் நட்புறவு போட்டி ஒன்றில் ஆடிய ஜுவன்டஸ்……

கோப்பா அமெரிக்கா போட்டியின் அரையிறுதியில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டீன அணி தோற்ற பின் அந்தப் போட்டியில் “தீவிரமான மற்றும் வேண்டுமென்ற” நடுவரின் தவறுகள் பற்றி ஆர்ஜன்டீன கால்பந்து சம்மேளனம் முறையிட்டிருந்தது. 

“ஆதாரமற்ற’ மற்றும் ‘போதிய மதிப்பளிக்காத” இந்த குற்றச்சாட்டுகள் கோப்பா அமெரிக்காவின் ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்குவதாக தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு பதிலளித்திருந்தது. 

இதில் சிலியுடனான போட்டியின் 37 ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் கெர்ரி மெடலுடன் ஏற்பட்ட மோதலை அடுத்தே மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதன்போது மெடலும் வெளியேற்றப்பட்டார்.   

பார்சிலோனா கழகத்துடன் இணையும் கிரீஸ்மன்

உலகக் கிண்ண வெற்றி வீரரான பிரான்ஸின் அன்டோயின்…….

“இந்த ஊழலில் ஓர் அங்கமாக நாம் இருக்க வேண்டியதில்லை” என்று குறிப்பிட்ட மெஸ்ஸி, “இந்தப் போட்டித் தொடர் முழுவதும் அவர்கள் எமக்கு போதிய மதிப்பு அளிக்கவில்லை” என்றார்.   

“துரதிஷ்டவசமாக நடுவர்களின் ஊழல், அவர்கள் மக்களுக்கும் கால்பந்து போட்டியை ரசிப்பதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் அதனை சீர்குலைத்துவிட்டார்கள்” என்றும் மெஸ்ஸி குற்றம்சாட்டினார். 

இந்த தொடரில் மெஸ்ஸி விருது வழங்கும் நிகழ்வையும் புறக்கணித்திருந்தார். 

தனது கருத்துகளுக்காக தடைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவது குறித்து பயப்படவில்லையா, என்று மெஸ்ஸியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உண்மையை கூறவேண்டி உள்ளது” என்று அவர் அப்போது பதிலளித்திருந்தார். 

எனினும் அவர் தனது கருத்துக்கு தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பிடம் பின்னர் மன்னிப்புக் கேட்டிருந்தார். 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<