பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெற சங்கக்காரவின் அறிவுரை

76
MCC president Kumar Sangakkara

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும்,  மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவருமான குமார் சங்கக்கார கேட்டுக் கொண்டுள்ளார். 

பாகிஸ்தானில் கடந்த 2009இல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் பயணம் செய்த பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.  

தனது ஜெர்சி, துடுப்பு மட்டையை ஏலத்தில் விடும் அசார் அலி

கொவிட்-19 வைரஸிற்கு எதிராக உதவும் வகையில் தன்னுடைய 2017ம் ஆண்டுக்கான..

மேலும் 6 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலுக்கு உள்ளான இலங்கை அணியில் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றிருந்தார்

இதையடுத்து சர்வதேச நாடுகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணியும் அங்கு சென்று விளையாடியது.

இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஊக்குவிக்கும் வகையில், அங்கு மற்ற நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட முன்வர வேண்டும் என்று குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாக எம்.சி.சியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக Sky Sports Cricket உடன் இடம்பெற்ற நேர்காணலில் சங்கக்கார கூறியுள்ளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டு ஒரு ஆசிய அணி அல்லது இரண்டாம் நிலை அணியொன்று அங்கு சென்று விளையாடுவது என்பது பெரிய விடயமாகும்.

அதேபோல, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அல்லது தென்னாபிரிக்கா கூட, பாதுகாப்பு உறுதி செய்யப்படும்போது உண்மையில் அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். எமது எம்.சி.சியின் சுற்றுப்பயணம் அதற்கு முன்னோடியாக இருக்கும்.  

2009 க்குப் பிறகு நான் மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்வேன் என்று நினைத்தபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால் இங்கே 10 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை

ஓய்வுபெற்ற பிறகு நான் மீண்டும் எனது கிரிக்கெட் ஹெல்மட்டை அணிந்துகொண்டு இவ்வளவு ரசிகர்களின் ஆதரவோடு விளையாடியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இடங்களில் ஒன்றாக இது இருந்தது” என்று அவர் கூறினார்.

உமர் அக்மலின் போட்டித் தடை குறித்து கம்ரான் அக்மல் ஆவேசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருடகால…

பாகிஸ்தான் அணியுடன் உடனே 5 டெஸ்ட் தொடரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முதலில் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும், தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் விளையாடலாம் என்று சங்கக்கார ஆலோசனை வழங்கியுள்ளார்

அத்துடன், ஒரு பலமான பாகிஸ்தான் அணி தமது சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுவது உலக கிரிக்கெட்டுக்கு ஏற்படக்கூடிய சிறந்த விடயங்களில் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்

கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு எம்.சி.சி அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், சுமார் 10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் குமார் சங்கக்கார எம்.சி.சி அணியின் தலைவராக விளையாடியிருந்தார்.

இதில் லாகூர் கிளெண்டர்ஸ் அணியுடனான டி20 போட்டியில் வெற்றியீட்டிய எம்.சி.சி அணி, பாகிஸ்தானின் சஹீன்ஸ் அணியுடனான 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<