இலங்கையர்களின் கிரிக்கெட் ஊழல் ஈடுபாடு குறித்து சங்கக்கார

71

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) முன்னெடுத்துள்ள ஊழல் தொடர்பான விசாரணைகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் சந்தேகிக்கப்படுவது தொடர்பில் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்திருக்கின்றார்.

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் தகுதி

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் 19…..

சங்கக்காரவை கெளரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அவரது தாய்க் கழகமான NCC, கடந்த வியாழக்கிழமை (05) அவர்களது சொந்த மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே, குமார் சங்கக்கார ஊழல்கள் தொடர்பான விடயங்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சந்தேகிக்கப்படுவது தொடர்பில் தனது கவலையினை வெளியிட்டிருந்தார்

மேலும், குமார் சங்கக்கார இலங்கையில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எந்த அச்சமுமின்றி கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கான ஆதரவு முறைமை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  

அண்மைக்காலத்தில் துரதிஷ்டவசமாக இலங்கை கிரிக்கெட்டில் ஊழல்  சம்பவங்கள் இடம்பெற்ற நிகழ்வுகள் சில பதிவாகியிருக்கின்றனஅப்படியான சம்பவங்கள் இடம்பெறவேண்டிய இடம் இது (இலங்கை) அல்ல.” என குமார் சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.  

“மேலும், இப்படியான துர்நிகழ்வுகள் நடைபெறாமல் உறுதிப்படுத்தி, கழகங்கள் தொடக்கம் சர்வதேசம் வரை கிரிக்கெட் விளையாட்டை ஊழல்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க அனைவரும் உறுதிபூண வேண்டும்” எனவும் குமார் சங்கக்கார தன்னை கெளரவிக்கும் நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

T20 தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20…….

சர்வதேச கிரிக்கெட் வாரியம், உலகம் பூராகவும் கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் 46 ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது. இந்த விசாரணைகளில் 23 இலங்கையில் இடம்பெறுவதே குமார் சங்கக்கார, கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் அதிக கரிசனை எடுத்துக் கொள்ள பிரதான காரணமாக அமைகின்றது

குமார் சங்கக்கார, ஊழல்கள் தொடர்பான விடயங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு அறிமுகப்படுத்தும் விடயங்கள் ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

இந்த விடயம் (ஊழல் விடயம்), கிரிக்கெட் வீரர்களுக்கு விழிப்புணர்வு  கல்வி வழங்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வீரர்களுக்கு தாம் பயமின்றி தங்களது திறமையையும் வெளிப்படுத்தி, விளையாட்டின் புனிதத்தையும் பேணி கிரிக்கெட் விளையாடுவதற்கு துணை புரிய ஆதரவு முறைமை ஒன்று எப்போதும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என்றார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<