அனுபவ வீரர்களோடு பங்களாதேஷின் T20 உலகக் கிண்ண அணி

60

2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் பங்களாதேஷின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  

புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை கோரும் இந்திய கிரிக்கெட் சபை!

அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் குழாத்தில் கடைசியாக நடைபெற்ற 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் உள்ளடக்கப்படாது போன அனுபவ சகலதுறைவீரரான மஹ்மதுல்லா உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

அதேநேரம் பங்களாதேஷ் குழாத்தின் தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷன்டோ நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, பிரதி தலைவர் பொறுப்பு தஸ்கின் அஹ்மட்டிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தஸ்கின் அஹ்மட் தற்போது சிறு உபாதைச் சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுத்திருக்கின்ற போதிலும் அவர் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பூரண உடற்தகுதியினைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

பங்களாதேஷ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களாக சகீப் அல் ஹசன் காணப்பட்ட அவருக்கு உறுதுணையாக மற்றுமொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் உள்ளார்இவர்கள் தவிர சொரிபுல் இஸ்லாமும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்தும் மற்றுமொரு பந்துவீச்சாளராக காணப்படுகின்றார் 

அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது நஜ்முல் ஹொசைன் ஷன்டோ, லிடன் தாஸ், சௌம்யா சர்க்கார் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் முக்கியமானவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 

T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான குழு D இல் உள்வாங்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் அணியானது தமது முதல் போட்டியில் இலங்கை வீரர்களை ஜூன் 08ஆம் திகதி எதிர்கொள்கின்றது. அதேநேரம் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதமாக பங்களாதேஷ் ஐக்கிய அமெரிக்க அணியுடன் T20 தொடர் ஒன்றில் ஆடவிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது 

பங்களாதேஷ் T20 உலகக் கிண்ண குழாம் 

நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (தலைவர்), தன்சிம் ஹஸன் தமிம், லிட்டன் தாஸ், சகீப் அல் ஹசன், தவ்ஹித் ரிதோய், மஹ்மதுல்லா, சௌம்யா சர்க்கார், ஜாகேர் அலி, மஹேதி ஹஸன், தஸ்கின் அஹ்மட், தன்வீர் இஸ்லாம், ரிசாட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம், தன்சிட் ஹஸன் சகீப்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<