இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) T20 பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் ஆகியோருக்கான புதிய தரவரிசையினை வெளியிட்டுள்ளது.
என்னைப் பார்த்து சாதிக்க கற்றுக் கொள்ளுங்கள் – மாலிங்க
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைக் …
புதிதாக வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் நடைபெற்று முடிந்த இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரில் திறமையினை வெளிப்படுத்திய இரு அணிகளதும் வீரர்கள் முன்னேற்றம் காண்பித்துள்ளனர்.
இலங்கை T20 அணியின் தலைவரும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளருமான லசித் மாலிங்க, நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரின் மூன்றாவது போட்டியில் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்து சாதனை செய்திருந்ததுடன் தொடரில் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
இவ்வாறாக சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை வெளிப்படுத்தியிருக்கும் லசித் மாலிங்க T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதீத முன்னேற்றம் ஒன்றை காண்பித்திருக்கின்றார். அந்தவகையில் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 41ஆவது இடத்தில் இருந்த லசித் மாலிங்க 20 இடங்கள் முன்னேறி தற்போது 21ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் திறமை காட்டிய இலங்கை அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான இசுரு உதான, T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது 50ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
மாலிங்கவின் சாதனையால் சுருண்டது நியூசிலாந்து
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற …
இதேநேரம், நியூசிலாந்து அணிக்காக நடைபெற்று முடிந்த T20 தொடரில் 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தனது தரப்பு 2-1 என தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த சுழல் பந்துவீச்சாளரான மிச்செல் சான்ட்னரும் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார். அதன்படி, 6 இடங்கள் முன்னேறியிருக்கும் சான்ட்னர் தற்போது T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை – நியூசிலாந்து T20 தொடரில் நியூசிலாந்து தரப்பினை வழிநடாத்திய அதன் தலைவர் டிம் சௌத்தியும் T20 பந்துவீச்சாளர்கள் தரவசரிசையில் சிறந்த முன்னேற்றம் ஒன்றினை காண்பித்துள்ளார். மொத்தமாக 14 இடங்கள் முன்னேறியிருக்கும் டிம் சௌத்தி தற்போது T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்்
இதேநேரம் புதிதாக வெளியிடப்பட்டுள்ள T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் முன்னேற்றம் காண்பித்துள்ளனர்.
நான் இலங்கை அணிக்கு ஆடுவேன் என்ற போது அனைவரும் சிரித்தனர் – சங்கக்கார
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கும் குமார் …
இதில், நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியில் அரைச்சதம் விளாசிய குசல் மெண்டிஸ், 33 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்தினை பிடித்திருக்கின்றார். மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்ல, T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் 28 இடங்கள் முன்னேறி 54ஆவது இடத்தினை பெற்றிருக்கின்றார்.
அதேவேளை, நியூசிலாந்து அணி சார்பில் T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் திறமையினை வெளிப்படுத்திய கொலின் டி கிராண்ட்ஹோம் 43 இடங்கள் முன்னேறி T20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 80ஆவது இடத்தினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…




















