பெண் குழந்தைக்குத் தந்தையானார் உசைன் போல்ட்

0
Sprint Legend Usain Bolt

உலகின் மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

பிரபல குறுந்தூர ஓட்ட நட்சத்திரமான உசைன் போல்ட், 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 செக்கன்களில் ஓடி உலக சாதனை படைத்தவர். 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 4X100 அஞ்சலோட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்தும் உள்ளார்.  

>> சமூக ஊடகத்தில் வைரலான போல்ட்டின் ‘சமூக விலகல்’ புகைப்படம்

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அவர், 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். 2017 உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு போல்ட் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்

33 வயதான உசேன் போல்ட், தனது காதலி 30 வயதான காசி பென்னட்டுடன் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த காசி பென்னட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

இந்நிலையில் உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தந்தை அந்தஸ்தை எட்டிய உசேன் போல்ட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<