நடுவரின் தீர்ப்புக்கு எதிராக விரக்தியை வெளிப்படுத்தினார் சங்கா

1869
DRS

கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது.

நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழப்பிற்காக இலங்கை அணியினரால் ஆட்டமிழப்பு கோரப்பட்டது.

காலையில் மணி அடித்த சங்கா மாலையில் அரைச்சதம் அடித்தார்

இதையடுத்து ஆடுகளத்திலிருந்த நடுவர்கள் அதனை மறுக்க இலங்கை அணியினால் மீள் பரிசோதனைக்கு கோரப்பட்டது. இதையடுத்து மீள் பரிசோதனையின் போதும் ஆட்மிழப்பு வழங்கப்படவில்லை.

குறித்த ஆட்டமிழப்பு மயிரிழையில் துடுப்பாட்ட வீரருக்கு சாதகமானதால்  ஜெனி பேர்ஸ்டோவ் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியை ஸ்திர நிலைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து குமார் சங்கக்கார தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

மீள்பரிசீலனை முறையில் ஆட்டமிழப்பென்பது சரியாக புலப்படுகின்றபோதிலும் நடுவர்கள் பிழையான தீர்ப்பை வழங்கியதால் அத்தீர்ப்பு வீணாகிப்போயுள்ளது. ஆட்டமிழப்பு மீள்பரிசீலனை முறையில் தெரியவேண்டும். இல்லாவிடில் அதுவொரு நகைச்சுவையாக மாறிவிடும்.

விக்கெட்டில் பந்து படுவது மீள்பரிசீலனையில் தெளிவாகத் தெரியும் போது அதற்கு நடுவரின் தீர்ப்பு தேவையில்லை. இவ்வாறு ஆட்டமிழப்பு வழங்குவது நீண்டநாட்களாகிவிட்டது. இந்நிலையில் இலங்கை அணி எவ்வித பிரயோசனமற்ற மீள்பரிசீலனை முறைகளை இழந்து சவால்களை சந்தித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

ஆதாரம்வீரகேசரி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்