எதிர்பார்த்ததைவிட பந்து முன்கூட்டியே சுழன்றது -ஹென்ரி நிகோல்ஸ்

1412

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றம் கண்டிருந்தபோது ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் ரொஸ் டெய்லர் 4 ஆவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது அந்த அணி வலுவான நிலையை எட்ட உதவியது. 

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பகல்போசண இடைவேளைக்கு முன்னர் நான்கு ஓவர்கள் இடைவெளியில் நியூசிலாந்து அணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

புதிய பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன் – அகில தனன்ஜய

எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் …

துணைக்கண்டத்தின் இந்த ஆடுகளத்தில் சில நேரம் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்து விடும் என்று நாம் தெரிந்தே இருந்தோம் என்று நிகோல்ஸ் மழையால் முன்கூட்டியே முடிவுற்ற முதல் நாள் ஆட்டம் பற்றி குறிப்பிட்டார். 

முதல் நாளில் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய அகில தனன்ஜயவின் பந்துவீச்சை நிகோல்ஸ் மற்றும் டெய்லர் சிறப்பாக கையாண்டனர். 78 பந்துகளுக்கு முகம் கொடுத்த நிகோல்ஸ் 42 ஓட்டங்களை பெற்றார்.   

“பகல்போசண இடைவேளைக்கு பின்னர் நானும் ரொஸ்ஸும் களமிறங்கியபோது பந்து சுழன்று ஒரு சந்தர்ப்பத்தில் துடுப்பு மட்டையை முறியடித்துச் செல்லும் என்று எதிர்பார்த்திருந்தோம். அது எமது விக்கெட்டை தக்கவைத்துக்கொள்ள இலகுவாக்கியது. இதனால் எமக்கு வசதியாக அமைந்தது. நாம் சிறப்பாக செயற்பட்டோம்.

அப்போது நிலைமை கடினமாக இருந்தது. நாம் நினைத்ததை விடவும் முன்கூட்டியே பந்து சுழல ஆரம்பித்தது. ஆனால் பந்து சுழலும் என்பதை எதிர்பார்த்தோம்” என்றும் முதல் நாள் ஆட்டத்திற்கு பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிகோல்ஸ் கூறினார். 

குறிப்பாக அகில தனன்ஜயவின் சுழலை எதிர்கொள்வது நிகோல்ஸுக்கு கடினமாக இருந்தது. போட்டி ஆரம்பத்திலேயே இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜீம் ரவால் மற்றும் டொம்ப் லேதமை விரைவாக ஆட்டமிழக்கச் செய்த தனன்ஜய முதல் நாளில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மாத்திரமே இலங்கை அணிக்காக விக்கெட் வீழ்த்தினார். 

“இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடும்போது பந்து வெளியே சுழலும் நிலையில் அவருக்கு சில வாய்ப்புகள் இருந்தன. அவர் சிறந்த பந்துவீச்சாளர். இன்று அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த தகுதி கொண்டவர். தற்காத்து ஆடியதோடு பந்து வெளியே சுழல்வது வசதியாக இருந்தது” என்று நிகோல்ஸ் குறிப்பிட்டார்.

வலுவாக கடல் காற்று வீசும் நிலையில் காலி ஆடுகளம் வேகமாக செயற்படும் என்பது தெரிந்ததே. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த ஓட்டங்கள் வலுவானதாக உள்ளது. குறிப்பாக ரொஸ் டெய்லர் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். 

மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட்…

“இங்கு முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் முக்கியமானது. ஆடுகளம் துடுப்பெடுத்தாட கடினமாக மாறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் இருப்பது நல்லது அவர் அழகாக துடுப்பெடுத்தாடினார்” என்று நிகோல்ஸ் கூறினார். 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<