மே. தீவுகள் அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு

64
indiatoday

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஜூன் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திகதி அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளை.துறை ஊடகவியாலளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக…

சர்வதேச ரீதியில் பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக,  இந்த தொடரானது பிற்போடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19  காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் தொடரை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கிந்திய தீவுகள் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதலை அளிக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாத காலப்பகுதியில் தொடரை நடத்த முடியும் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.

தொடர் பிற்போடப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனி கிரேவ், “நாம் தொடர்ந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் தொடரை மீண்டும் ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

தொடரை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு மற்றுமொரு திகதியை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் என உறுதிசெய்யப்பட்ட பின்னர் தான் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியும்.

அதேநேரம், இந்த தொடரில் விளையாடுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை எமது சுகாதார அதிகாரிகள் தான் மேற்கொள்வர். தொடர், நடத்தப்படும் பட்சத்தில் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான உடல் நலம் குறித்து இவர்கள் கலந்துரையாடுவர். இதன் பின்னரே தொடரில் எம்மால் பங்கேற்க முடியும்” என்றார்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டி ஜூன் 4-8ம் திகதிகளில் தி ஓவல் மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஜூன் 12-16ம் திகதிகளில் எட்ஜ்பெஸ்டனிலும், மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஜூன் 25-29ம் திகதிகளில் லோர்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<