மக்களுக்கு உதவும் பணியில் இணைந்த குசல் பெரேரா

95
Kusal Perera

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய விக்கெட்காப்பாளரும், அதிரடி துடுப்பாட்டவீரருமான குசல் ஜனித் பெரேரா கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பொது மக்களுக்கு உதவியிருக்கின்றார். 

கொரோனா பீதியில் கண்டியில் சிக்கிக் கொண்ட சிதத் வெத்தமுனி

இலங்கையிலும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதால்

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இலங்கை முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், வறுமை நிலையில் வாழும் மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில், மிகப் பெரும் சிக்கல்களை எதிர் நோக்கியிருக்கின்றனர். இவ்வாறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கே குசல் பெரேரா உதவியிருக்கின்றார். 

அந்தவகையில், குசல் பெரேராவின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட உலர் உணவுப் பொதிகள் நேற்று (11), பொலிஸாரின் உதவியுடன் கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து குசல் பெரேராவினால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

”குசல் ஜனித் பதநாம” என்னும் பெயரில் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 100 குடும்பங்களைச் சேர்ந்தோர் பயனடைந்திருந்திருந்தனர். 

குசல் ஜனித் பெரேரா பொது மக்களுக்கு உதவியதன் மூலம் பொது மக்களுக்கு உதவிய மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, ரொஷான் மஹநாம, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் போன்ற வீரர்களும் கொரோனா வைரஸினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 198 பேர் நோயாளிகளாக இனங்காணப்பட்டிருப்பதோடு 7 இறப்புச் சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. அதேநேரம், நோயாளிகளாக இனங்காணப்பட்டவர்களில் 54 பேர் தற்போது பூரண குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க