யுவராஜ், கிப்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார் பிலிப்ஸ்

1729
Glenn Phillips
 

சர்வதேச கிரிக்கட் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த பெருமை தென் ஆபிரிக்க வீரர் ஹெர்செல்லே கிப்ஸ் மற்றும் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோரை மட்டுமே சாரும்.

இந்நிலையில் இங்கிலாந்தின் மெர்ல்ன்போர்ன் கிரிக்கட் கழகத்துக்கு விளையாடிவரும் 19 வயதேயான கிளென் பிலிப்ஸ் என்ற நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து இவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சமீரவிற்குப் பதிலாக லக்மால் விளையாடும் வாய்ப்பு

தொடர்ந்து அசத்திய அவர் டியூக் நோர்போல்ச் லெவன் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 123 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஆட்டம் இழக்காமல் 201 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரும் விக்கட் காப்பாளருமான கிளென் டொமினிக் பிலிப்ஸ், அண்மையில் பங்களாதேஷில்  நடநது முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்