விளையாட்டு வீரர்களுக்காக புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் Vision Care

Sports Vision by Vision Care

151

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையின் கண் மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழும் Vision Care நிறுவனம், விளையாட்டுத்துறையில்  புதிய புரட்சி ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் பார்வைக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய வகை தொழில்நுட்ப முறைமை ஒன்றினை, “Sports Vision” என்ற பெயரில் அறிமுகம் செய்யவிருக்கின்றது. 

“Sports Vision” என்றால் என்ன?

“Sports Vision” தொழில்நுட்பம் மூலம் குறிப்பிடப்படுவது பார்வையுடன் தொடர்புபட்ட ஆற்றல்களை அதிகரித்து விளையாட்டினுடைய தரத்தினை மேம்படுத்துவதாகும். இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு வகையான நுணுக்க முறைகளும், பயிற்சி முறைகளும் கையாளப்படுவதோடு, இந்த தொழில்நுட்ப முறை மூலம் மூளைக்கும், கண்களுக்கும் இடையேயான தொடர்புகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Courtesy IMG Academy

பார்வை அனைவருக்கும் மிக முக்கியமான புலனாக இருக்கின்றது. எமது உடலின் 70% உணர்வு வாங்கிகள் கண்ணிலேயே அமைந்திருக்கின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பார்வை ஏனைய புலன்களை விட மிக முக்கியமான தகவல்களை தொகுத்துக் கொடுப்பதாக அமைகின்றது. இதனால், விளையாட்டில் ஈடுபடும் போது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த பார்வை தொடர்பான விடயங்களை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.  

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.

எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்கின்றது? 

இந்த தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள, கண்கள் மூலம் புலன்கள் உணரப்படும் போது அடிப்படையாக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

முதலில் உங்கள் கண்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்ற பார்வையுடன் தொடர்புட்ட தகவல்கள் உங்கள் மூளைக்கு அனுப்பப்படும். தொடர்ந்து நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமைய உங்கள் மூளை (என்ன செய்வது என்பது தொடர்பில்) தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளும். இதனை அடுத்து  அதற்கு அமைவாக உங்கள் உடற்பாகங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால், இந்த விடயங்கள் அனைத்துமே மிகவும் குறுகிய (ஒரு செக்கனுக்கும் குறைவான) நேரத்தில் நடைபெறுகின்றன. அதோடு, இந்த செயற்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் இருக்கின்றன. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் Sports Vision தொழில்நுட்பம் பல்வேறு கோணங்களில் பார்வை மூலம் உள்வாங்கப்படும் தகவல்களை ஒழுங்குபடுத்துவதோடு, மனித மூளைக்கு தவகல்கள் செல்வதனை வினைத்திறனாக நடாத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

Sports Vision தொழில்நுட்பத்தினை Vision Care நிறுவனம்  எப்படி வழங்குகின்றது?

இந்த சேவையினை வழங்க Vision Care மூன்று படிநிலைகளை உபயோகம் செய்கின்றது. (மதிப்பீடு, பகுப்பாய்வு, முன்னேற்றல்)

ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை அவரின் பார்வையுடன் தொடர்புடைய 10 ஆற்றல்களை பரிசோதிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் அவர் எந்த இடங்களில் முன்னேற வேண்டியிருக்கின்றார், அவரது பலவீனங்கள் என்ன என்பது தொடர்பில்  மதிப்பீடு செய்யப்படும். 

அந்த 10 ஆற்றல்களும் கீழே வருகின்றன. 

  1. Visual Clarity – எந்த  அளவு தூரத்திற்கு ஒருவருக்கு பார்வையிட முடியும் என்பது பற்றிய ஆற்றல். 
  2. Contrast Sensitivity – வெவ்வேறு நிலைமைகளில் பந்தினையோ அல்லது வேறு ஒரு பொருளினையோ பார்க்கும் திறன். 
  3. Depth Perception – பொருள் ஒன்று எந்தளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கணிக்கும் திறன்.
  4. Near/Far Quickness – அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருட்களை விரைவான அவதானிக்கும் திறன். 
  5. Perception Span – சந்தர்ப்பத்திற்கு மிகவும் தேவையாக இருக்கும் விடயத்தில் இருந்து தகவல் பெறும் ஆற்றல்.
  6.  Reaction Time – தூண்டலுக்கும், துலங்கலுக்கும் இடையிலான நேரம்
  7. Multiple Object Tracking – பல்வேறு பொருட்களை அவதானிக்கும் திறன். 
  8. Target Capture – இலக்குகளுக்கு ஏற்றாற்போல் விரைவாக செயற்படுதல். 
  9. Eye-Hand Coordination – இலக்குகளுக்கு ஏற்றாற்போல் வேகத்தினை முகாமை செய்து கைகளை ஒருங்கிணைவு செய்யும் ஆற்றல் 
  10. Go/No Go – அழுத்தமான தருணங்களில் தூண்டல்களுக்கு, துலங்களை காட்டும் போது வெளிக்காட்டும் வேகம்

மதிப்பீடுகள் நிறைவுக்கு வந்த பின்னர், விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனைகளுக்கு அவர்களுக்கு பொருத்தமான பயிற்சியாளர் ஒருவரின் துணையுடன் அவர்களது ஆற்றல்களை பகுப்பாய்வு செய்து கொள்ள முடியுமாக இருக்கும். பின்னர் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் விளையாட்டில் உலகில் சிறந்த நிலையில் இருக்கும் வீரர்களோடு அவர்களின் நிலை எப்படி இருக்கின்றது என்பதனை ஒப்பிட்டுக் கொள்ளவும் முடியும். அதேநேரம், வீரர்கள் எந்த இடத்தில் பின்தங்கியிருக்கின்றார்கள் என்பதனைப் பார்த்து, அதற்கேற்ற வேலைகளையும் செய்ய முடியும். 

Image Courtesy – Duke Health

ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை குறிப்பிட்ட இலக்கிற்காக தங்களை அர்ப்பணித்து, தங்களது ஆற்றல்களை விருத்தி செய்ய விரும்பினால் ஏற்கனவே மேற்கொண்ட மதிப்பீட்டுகளுக்கு அமைய தயாரிக்கப்படும் 4 தொடக்கம் 6 வாரங்கள் கொண்ட பிரத்தியேக பயிற்சித் திட்டத்திற்குள் அவர்களுக்கு இணைய முடியும். 

எமது கண்கள் எமக்கு இருக்கும் பிரதான புலன் உறுப்புக்களில் ஒன்று. Sports Vision தொழில்நுட்பமானது ஒரு உடற்பயிற்சி நிலையம் (Gym) போன்று உடலின் புலன் உறுப்புக்களில் ஒன்றினை பயிற்சிகள் மூலம் தயார்படுத்தும் ஒரு செயன்முறையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.

>>மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு<<