திறமையான வீரர்களை இனங்காண மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பாளர்கள்

345
Provincial Coordinators - cover

அனைத்து வயதுப் பிரிவையும் உள்ளடக்கியதாக நாடு பூராகவும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், மாவட்ட மற்றும் மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வயதுப் பிரிவினர்களையும் அடையாளம் காண்பதே இந்த ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும்.

>> Video – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி? | Sports RoundUp – Epi 150

இதன்படி, மாவட்ட மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்கள், பாடசாலை பயிற்சியாளர்கள், கிரிக்கெட் பொறுப்பாசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் இணைந்து வீரர்கள் மற்றும் வீரர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு தேசிய மட்டத்துக்கு கொண்டு வருவது ஒருங்கிணைப்பாளர்களினது முக்கிய பொறுப்பாக அமையவுள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018இல் நான்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆரம்பமாகிய இந்த வேலைத்திட்டமானது 2020இல் ஆறாக உயர்த்தப்பட்டது

இந்த நிலையில், இவ்வருடம் நாடு பூராகவும் இந்த வேலைத்திட்டத்தை வியாபிக்கும் நோக்கில் 12 ஒருங்கிணைப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளமை சிறப்பம்சமாகும்.  

இதனிடையே, மாகாண ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது

>> விளையாட்டு வீரர்களுக்காக புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் Vision Care

இதில் உள்ளூர் கிரிக்கெட் பிரிவின் தலைவர் சிந்தக எதிரிமான்னே, பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வட்டுஹேவா மற்றும் அதன் செயலாளர் கமல் இந்திரஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

ஒருங்கிணைப்பாளர்கள் விபரம்

  • மலிக் கீர்த்தி பெர்னாண்டோமேல் மாகாணம் (வெளிப் பகுதிகள்)
  • சமன் ஹெட்டியாரச்சிமேல் மாகாணம் (வடக்கு)
  • கனிஷ் பெரேராமேல் மாகாணம் (மத்தி)
  • டி.எம் ராஜரத்னமேல் மாகாணம் (தெற்கு)
  • சுராஜ் சன்ஜீவமேல் மாகாணம் (வடக்கு வெளிப் பகுதிகள்)
  • லீலானந்த குமாரசிறிதென் மாகாணம்
  • சிசிர வீரசிங்கஊவா மாகாணம்
  • இந்திக ஹெட்டியாரச்சிகிழக்கு மாகாணம்
  • நுவன் சமரனாயக்கமத்திய மாகாணம்
  • கீர்த்தி குணரட்னவட மத்திய மாகாணம்
  • .எம்..பி அத்தபத்துவட மேல் மாகாணம்
  • வீ. ஹஜீபன்வடக்கு மாகாணம்

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<