டி20 போட்டிகளில் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது – சர்பராஸ் அஹ்மட்

86
Sarfaraz Ahmed
PCB TWITTER

நேற்று (5) லாஹூரில் இடம்பெற்று முடிந்த இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் தோற்கடித்திருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பராஸ் அஹ்மட், இலங்கை அணியுடனான போட்டி பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

மொமினுல் ஹக்கின் சதம்: மெஹெடியின் அபார பந்துவீச்சினால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் A அணி

இலங்கை A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில்

உலகில் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தான் இப்போட்டியில் முதல் தடவையாக தசுன் ஷானக்க மூலம் வழிநடாத்தப்பட்ட அனுபவம் குறைந்த இலங்கை குழாத்தினை எதிர்கொண்டே தோல்வியினை தழுவியிருந்தது. இது தொடர்பில் பேசியிருந்த சர்பராஸ் அஹ்மட் T20 போட்டிகளில் எந்த அணியாக இருந்த போதிலும் அவர்களை குறைத்து மதிப்பிக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

”T20 போட்டிகளில் எந்த அணியாக இருந்த போதிலும் நாம் அவர்களை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.”

இதேவேளை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை காட்டிய போதிலும், பின்னர் தளர்வாக மாறியிருந்தது. இப்படியாக இலங்கை அணியின் துடுப்பாட்ட தளர்வுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சர்பராஸ் அஹ்மட் பாராட்டியிருந்தார்.

“அவர்கள் (இலங்கை அணியினர்) சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெற்றனர். எனினும், எமது பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இதற்காக, அவர்களைப் பாராட்டுகின்றேன். அவர்கள் மத்திய ஓவர்களில் குறைவான ஓட்டங்களை வழங்கியிருந்தனர். இன்னும், களத்தடுப்பும் நன்றாக இருந்தது” என சர்பராஸ் அஹ்மட் குறிப்பிட்டார்.

முதல் நிலை T20 அணியை வீழ்த்தி சாதித்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான்

இறுதியாக கதைத்திருந்த சர்பராஸ் அஹ்மட், இலங்கை அணிக்கு எதிரான அடுத்த T20 போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான முறையில் செயற்படும் என குறிப்பிட்டிருந்தார்.

“இறைவன் நாடினால், நாங்கள் அடுத்த போட்டியில் சிறப்பாக செயற்படுவோம்.”

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான T20 தொடரின் அடுத்த போட்டி, முதல் போட்டி இடம்பெற்ற அதே லாஹூர் மைதானத்தில் திங்கட்கிழமை (7) இடம்பெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க