மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் கவ்ஷல் சில்வா

280
Kaushal Silva

கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கு எதிராக இலங்கை அணி வீரர்கள் கண்டி பல்லேகலே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அன்றைய பயிற்சிப் போட்டியில் கவ்ஷல் சில்வா ஷோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது தினேஷ் சந்திமால் அடித்த பந்து கவ்ஷல் சில்வாவின் பின் தலையில் பட்டு காயம் அடைந்தார். இதன் பின் அவசரமாக கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கவ்ஷல் சில்வாவிற்கு “கெட் ஸ்கேன்” (CAT Scan) பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கண்டியில் இருந்து விஷேட ஹெலி மூலம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கவ்ஷல் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார் என இலங்கை கிரிக்கட் சபையின் வைத்தியர் குழு பேராசிரியர் அர்ஜுன சில்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் கௌஷால் சில்வா இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கட் சபையின் வைத்தியர் குழு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் கவ்ஷல் சில்வா சதம் அடித்திருந்தமை ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்