இந்திய தொடரிலிருந்து வெளியேறும் கேன் வில்லியம்சன்!

New Zealand tour of India 2023

151
Kane Williamson, Gary Stead to skip India tour

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாத்திலிருந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சௌதி ஆகியோர் விலகியுள்ளனர்.

நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

>> அபீப், பினுரவின் பிரகாசிப்புடன் ஜப்னா அணிக்கு வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான குழாத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

அதன்படி வீரர்களின் பணிச்சுமையை குறைக்கும் முகமாக கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சௌதி ஆகியோருக்கு இந்திய தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக மார்க் செப்மன் மற்றும் ஜெகொப் டபி ஆகியோர் இந்திய தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இஸ் சோதி மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் இரண்டு தொடர்களுக்குமான குழாத்திலும் இடம்பெற்றுள்ளதுடன், புதுமுக வீரர் ஹென்ரி சிப்லி முதன்முறையாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய தொடருக்கான அணித்தலைவராக டொம் லேத்தம் செயற்படவுள்ளார்.

அதேநேரம் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் பாகிஸ்தான் தொடரில் மாத்திரம் அணியுடன் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்திய தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக லுக் ரோன்கி செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து ஜனவரி மாத ஆரம்பத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாட இந்தியா செல்லவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<