IPL தொடரில் சுனில் நரைனின் சாதனையை முறியடித்த ரபாடா

95
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா ஐ.பி.எல். தொடரில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய தினம் (17) டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இந்தப் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்

இந்தப் போட்டியின் போது, 47 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவருமான பெப் டு ப்ளெசிஸினை ஆட்டமிழக்கச்செய்து, ஐ.பி.எல். தொடரில் தன்னுடைய 50வது விக்கெட்டினை ரபாடா கைப்பற்றினார்.

அதன்படி, ரபாடா தன்னுடைய 27வது ஐ.பி.எல். போட்டியில், 50 விக்கெட்டுகள் என்ற பிரதியை கைப்பற்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரைனின் சாதனையை முறியடித்தார். சுனில் நரைன் 32 போட்டிகளில் இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார்.

இந்தப்பட்டியலில் லசித் மாலிங்க 33 போட்டிகளுடன் 3வது இடத்தையும், இம்ரான் தாஹிர் 35 போட்டிகளுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளதுடன், 36 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிச்சல் மெக்லானகன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

காகிஸோ ரபாடா இந்த முறை ஐ.பி.எல். தொடரில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் விளையாடிவரும் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான என்ரிச் நோக்கியா ஐ.பி.எல். தொடரில் வேகமான பந்தை வீசியவர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

என்ரிச் நோக்கியா ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 156.22 வேகத்தில் பந்துவீசி, இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<