ஜோஸ் ஹேசல்வூட்டினை இரண்டாவது டெஸ்டில் இழக்கும் ஆஸி. அணி

41
Josh Hazlewood

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு 6 மில்லியன்களை வழங்கும் SLC<<

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலைட் நகரில் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி பகலிரவு மோதலாக நடைபெறுகின்றது. அதன்படி இந்த டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இருந்தே ஹேசல்வூட் உபாதை காரணமாக விலகியிருக்கின்றார்.

ஹேசல்வூடிற்கு ஏற்பட்டிருக்கும் உபாதையானது அவருக்கு முதன் முறையாக இந்திய அணியுடன் அவுஸ்திரேலியா தமது சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பையும் இல்லாமல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் அவுஸ்திரேலிய குழாத்தில் அறிமுக வீரர்களான சோன் அப்போட் மற்றும் ப்ரன்டண் டொக்கட் ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் ஸ்கொட் போலன்டும் அவுஸ்திரேலிய குழாத்தில் மேலதிக வேகப்பந்துவீச்சாளராக காணப்படுகின்றார்.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை அடைந்திருக்கி்ன்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<