ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி நேபாள வீரர் சாதனை!

Nepal Cricket a

56

ACC பிரீமியர் கிண்ண T20I தொடரின் கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபெந்ர  சிங் ஐரீ 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். 

மகளிர் T20I உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆடும் இலங்கை

இன்னிங்ஸின் கடைசி ஓவர் ஆரம்பத்தில் 15 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை ஐரீ பெற்றிருந்தார். நேபாளம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றிருந்தது 

இந்தநிலையில் கம்ரான் கானின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய ஐரீ 21 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை குவித்ததுடன், நேபாளம் அணி 210 ஓட்டங்களை பெற்று 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினையும் பதிவுசெய்தது. 

T20I கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் இந்திய அணியின் யுவராஜ் சிங், ஸ்டுவர்ட் புரோட்டின் ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு அகில தனன்ஜயவின் ஓவரில் மே.தீவுகளின் கீரன் பொல்லார்ட் 6 சிக்ஸர்களை விளாசினார். தற்போது குறித்த இந்த இரண்டு வீரர்களின் வரிசையில் ஐரீயும் இணைந்துள்ளார். 

திபெந்ர சிங் ஐரி T20 கிரிக்கெட்டில்  ஏற்கனவே 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவின் T20 போட்டியில் மொங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<