ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹேஷல்வூட் ஆடுவாரா?

Australia Cricket

209
Josh Hazlewood

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேஷல்வூட் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான உடற்தகுதியுடன் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஜோஷ் ஹேஷல்வூட் சிறிய உபாதை ஒன்று காரணமாக (side soreness) கடந்த வாரம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.

>> RCB அணியை IPL இல் இருந்து வெளியேற்றிய சுப்மன் கில்

குறித்த உபாதைக்கான ஸ்கேன் பரிசோதனைகள் நடைபெற்றிருந்த நிலையில் அதில் தீவிரமான உபாதைகள் அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரால் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூர் அணிக்காக 7.5 கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்ட ஜோஷ் ஹேஷல்வூட் அணியின் ஆரம்ப போட்டிகளில் விளையாடவில்லை. தென்னாபிக்க தொடரில் வைத்து ஏற்பட்ட உபாதை காரணமாக இவர் தொடர்ந்து இந்தியா மற்றும் IPL தொடரின் ஆரம்ப போட்டிகளை தவறவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து உபாதையிலிருந்து குணமடைந்துவந்த இவர் தன்னுடைய முதல் போட்டியில் மே முதலாம் திகதி லக்னோவ் அணிக்கு எதிராக விளையாடினார். இதன் பின்னர் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் என மொத்தமாக இம்முறை 3 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஆஷஷ் தொடர்களுக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தை ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<