வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 10

328
OTD-Aug-10

2014ஆம் ஆண்டுகாலி மைதானத்தில் மஹேலவின் இறுதி டெஸ்ட்

இலங்கை அணியின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக விளையாடிய நாளாகும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் மஹேல ஜயவர்தன முதல் இனிங்ஸில் 59 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 26 ஓட்டங்களையும் பெற்றார்.

மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு வெற்றி பிரியாவிடை கொடுத்து இருந்தமை முக்கிய அம்சமாகும்.

2000ஆம் ஆண்டுஅர்ஜுனவிற்கு டெஸ்ட் கிரிக்கட்டில் இறுதி நாள்

இலங்கை அணியை 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஒரே தலைவர் என்ற பெறுமையுடைய அர்ஜுன ரணதுங்க தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாளாகும்.

தனது இறுதி டெஸ்ட் போட்டியில்  அர்ஜுன ரணதுங்க தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் 14 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றார்.

அர்ஜுன ரணதுங்கவின் பிரியாவிடைப் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றது.

1982ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பி.சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கட்டிற்கு அறிமுகமான அர்ஜுன ரணதுங்க தனது  18 வருட டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35.69    என்ற துடுப்பாட்ட சராசரியில் 5105    ஓட்டங்களைப் பெற்று  இருந்தார்.

அதில் அதிகபட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 135 ஓட்டங்களாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அர்ஜுன ரணதுங்கவின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் 65.00 என்ற  பந்துவீச்சு சராசரியில் 16 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 9

ஆகஸ்ட்  மாதம் 10ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1895 ஹேம்மி லவ் (அவுஸ்திரேலியா)
  • 1923 பிரெட் ரிஜ்வே (இங்கிலாந்து)
  • 1943 சப்கட்  ராணா (பாகிஸ்தான்)
  • 1970 பிரெண்டன் ஜூலியன் (அவுஸ்திரேலியா)
  • 1978 க்றிஸ் ரீட் (இங்கிலாந்து)
  • 1979 தினுச பெர்னாண்டோ (இலங்கை)
  • 1980 ரயன் வால்டர்ஸ் (நமீபியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்