இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்கப்பட்ட ஜொப்ரா ஆர்ச்சர்

70
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். 

ஜொப்ரா ஆர்ச்சர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தார். எனினும்,  குறித்த தொடரை இங்கிலாந்து அணி 3-1 என கைப்பற்றியிருந்தது.

விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய …..

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளன.

இந்த நிலையில் T20I போட்டிகளுக்கான குழாத்திலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜொப்ரா ஆர்ச்சர் முழங்கை உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளாகியுள்ள ஜொப்ரா ஆர்ச்சர் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து குழாத்திலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் சகிப் மஹ்மூட் இணைக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குழாத்திலும் இணைக்கப்படுவார் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் …….

சகிப் மஹ்மூட் இதுவரையில் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், 3 T20I போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற T20I தொடரில் விளையாடியிருந்தார்.

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், T20I தொடர் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<