உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் ஜொப்ரா ஆர்ச்சர் இணைப்பு

318

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான  15 பேர் கொண்ட இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தினை இன்று (21) வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகக் கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில் பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட வேகப்பந்து சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருக்கின்றார்.

உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய உத்தேச இங்கிலாந்து

இதன்மூலம், மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாகக் கொண்ட ஆர்ச்சர், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக கடந்த மார்ச் மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்ற நிலையில், அவ்வணிக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றார்.

ஆர்ச்சர் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால், முன்னர் அறிவிக்கப்பட்ட உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில் இடம்பெற்ற இடதுகை வேகப் பந்துவீச்சாளரான டேவிட் வில்லி நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை இழக்கின்றார்.  

டேவிட் வில்லி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து தேர்வாளர்களை திருப்திப்படுத்த தவறியதனாலேயே உலகக் கிண்ண வாய்ப்பினை இழந்திருக்கின்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய டேவிட் வில்லி, 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

இதேநேரம், ஜொப்ரா ஆர்ச்சர் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களின் போது மணிக்கு 140 கிலோ மீட்டரிற்கு மேலான வேகத்துடன் துல்லியமான யோக்கர் பந்துகளை வீசி இங்கிலாந்து தேர்வாளர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடனான கடைசி போட்டியிலும் இங்கிலாந்துக்கு உறுதியான வெற்றி

இங்கிலாந்து அணிக்காக கடைசியாக 2018ஆம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டிகளில் ஆடிய லியம் டாவ்சனும், உலகக் கிண்ணத்திற்கான இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வீரராக மாறுகின்றார். சுழல்பந்து சகலதுறை வீரரான டாவ்சன் உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்ற ஜோ டென்லியின் இடத்தினை எடுத்திருக்கின்றார்.

டேவிட் வில்லி போன்று அண்மையில் இடம்பெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜொலிக்க தவறியதன் காரணமாகவே ஜோ டென்லி உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் இறுதி வீரர்கள் குழாத்தில் இடம்பிடிக்க தவறியிருக்கின்றார். பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடிய ஜோ டென்லி, 21 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், லியம் டாவ்சன் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்தின் உள்ளூர் ஒருநாள் தொடர் ஒன்றில், 9 போட்டிகளில் மாத்திரம் ஆடி 18 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததோடு 274 ஓட்டங்களையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஊக்க மருந்து பரிசோதனையில் சித்தி எய்தத் தவறி, இங்கிலாந்து உலகக் கிண்ண அணியில் இருந்து நீங்கிய அலெக்ஸ் ஹேல்ஸின் இடத்தினை உலகக் கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இறுதி வீரர்கள் குழாத்தில் ஜேம்ஸ் வின்ஸ் பிரதியீடு செய்கின்றார்.

இலங்கையின் உலகக் கிண்ண சீருடையை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒடெல்

துடுப்பாட்ட வீரராக களம் வரும் ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்தின் உள்ளூர் ஒருநாள் தொடர் ஒன்றில் சிறப்பாக செயற்பட்டு 7 போட்டிகளில் விளையாடி 509 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் வின்ஸ் உலகக் கிண்ணத் தொடரின் போது இங்கிலாந்து அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வீரர்கள் தவிர உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து இறுதி வீரர்கள் குழாத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அந்தவகையில், உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்ற ஏனைய வீரர்களே உலகக் கிண்ணத்திற்கான இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தினை பூர்த்தி செய்கின்றனர்.

உலகக் கிண்ணத் தொடரை வெல்ல எதிர்பார்க்கப்படும் நாடுகளில் ஒன்றாக உள்ள இங்கிலாந்து இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடரினை தென்னாபிரிக்க வீரர்களுடன் இடம்பெறும் போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.

உலகக் கிண்ண இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஆதில் ரஷீத், கிரிஸ் வோக்ஸ், லியம் பிளன்கட், டொம் கர்ரன், லியம் டாவ்சன், ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க