இலங்கையின் உலகக் கிண்ண சீருடையை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒடெல்

288

இலங்கையின் முன்னணி ஆடை, அணிகலன் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஒடெல் (ODEL), இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண சீருடையினை (Jersey) தயாரித்த மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து, குறித்த சீருடையினை (பொது மக்களுக்கு) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் பங்காளர்களாக  மாறுகின்றது.

“இலங்கையின் கடற்பரப்பினை வாழ்விடமாக கொண்டு அழிவினை எதிர்நோக்கியுள்ள கடலாமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட இந்த சீருடையினை அறிமுகம் செய்யும் உத்தியோகபூர்வ பங்காளர்களாக மாறுவதில் நாம் பெருமையடைகின்றோம். இந்த சீருடை மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் முற்று முழுதாக மீள் சுழற்சி கடல் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மாஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு இலங்கையின் கடற்படையினர் கடற்பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து உதவியிருந்தனர். இது உண்மையில் முன்மாதிரியான வேலைத்திட்டமாகும்.” என சொப்ட்லொஜிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் குழு இயக்குனர், டெஸிரி கருணாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

உலகக் கிண்ணத்தில் சுற்றாடல் காப்பிற்கான ஜேர்சியை பயன்படுத்தவுள்ள இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு…

“ஒடெலானது இலங்கையில் விளையாட்டிற்கும், தேகாரோக்கியத்திற்குமான ஆதரவுகளை எப்போதும் வழங்கி வருகின்றது. இதற்காக, பாடசாலைகள் உள்ளூர் விளையாட்டு கழகங்கள் என்பவற்றுடன்  கைகோர்க்கும் இந்நிறுவனம் சுற்றாடல் காப்பிலும், வனஜீவராசிகளை பாதுகாப்பதிலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு சூழலை பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்கின்றது. தற்போது இந்த (மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடனான) கைகோர்த்தல் மூலம் சமுத்திர பாதுகாப்பிலும் எமது ஆதரவினை நீடிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இது இந்த தருணத்தில் இலங்கைக்கு மட்டுமல்லாமல் முழு  உலகிற்கும் தேவையாக இருக்கின்றது.” என டெஸிரி கருணாரத்ன மேலும் கூறியிருந்தார்.

மாஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஒடெல், விளையாட்டு சீருடைகளினையும், விளையாட்டு சார்ந்த ஏனைய ஆடைகளினையும் தமது வாடிக்கையாளர்களுக்கு தருவதில் ஒருபடி மேலே இருக்கின்றது என்றே கூற முடியும். அந்தவகையில் இலங்கை மண்ணில் ஒடெலில் மாத்திரமே உலகின் முண்ணனி விளையாட்டு நிறுவனங்கள் (Nike, Puma, Adidas, Speedo, Reebok, Canterbury) அனைத்தினதும் தயாரிப்புக்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இலங்கை கிரிக்கெட், இலங்கை கடற்படை என்பவற்றுடன் இணைந்து கடல் பிளாஸ்டிக் மீள்சுழற்சி மூலம் இலங்கை அணியின் உலகக் கிண்ண சீருடையினை தயாரித்துள்ள மாஸ் நிறுவனம் அதன் மூலம் புதிய அத்தியாயம் ஒன்றினை நோக்கியே பயணிக்கின்றது எனலாம்.

Photos: Launch of Official ICC Cricket T-Shirt at ODEL

மாஸ் நிறுவனம் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் சீருடையில் கடலாமை படம் பொறிக்கப்பட்ட மேலாடை (Shirt) ஒன்றினை தயார் செய்ய 10 பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேநேரம், உலகில் இருக்கும் ஏழு வகை கடலாமைகளில் ஐந்து வகைகள் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற காரணத்தினாலேயே, கடலாமைகளின் படம் அதன் முக்கியத்துவம் கருதி, இலங்கை அணியின் உலகக் கிண்ண சீருடையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மாஸ் எக்டிவ் நிறுவனத்தின் வியபார இயக்குனரான ரஷ்மிக்க பீரிஸ், பிளாஸ்டிக் மீள்சுழற்சி போன்ற செயற்பாடுகள் மூலம் மாஸ் நிறுவனமானது கடல் மாசடைதலை தடுப்பதற்கு நீண்ட கால தீர்வுகளை பெறும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு இலங்கை கடற்படை தளபதி பியல் டி சில்வாவும் இந்த கடல் பிளாஸ்டிக் மீள் சுழற்சி சமுத்திரம் சார்ந்த விடயங்களில் பல்வேறு வகைகளில் பலன்தரக்கூடிய வேலைத் திட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான

இலங்கை அணிக்காக 2012 ஆம் ஆண்டு…

ஒடெல் மூலம் (பொது மக்களுக்கு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலங்கை அணியின் இந்த உலகக் கிண்ண சீருடையினை அதன் பின்வரும் கிளைகளில் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. வோர்ட் பிளேஸ்
  2. கொஹுவல
  3. டச்சு வைத்தியசாலை (Dutch Hospital)
  4. குயின்ஸ் ஹோட்டல், கண்டி
  5. கொழும்பு சிட்டி சென்டரின் ஒடெல் விளையாட்டு தொகுதி
  6. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஒடெல் கடைத் தொகுதி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<