ரோய், ஆர்ச்சர் மற்றும் சர்பராஸிற்கு ஐசிசி அபராதம்

3323
Roy
@ICC

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (03) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது…

அதேநேரம், பந்து வீசுவதற்கு அதிக நேரத்தினை எடுத்துக்கொண்ட காரணத்திற்காக (slow over rate) பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கும் ஐசிசியினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச போட்டியொன்றில் வீரர் ஒருவர் மைதானத்தில் மற்றுமொரு வீரர் அல்லது அதிகாரிகளிடம் நடந்துக்கொள்ளும் விதம் தொடர்பான ஐசிசியின் 2.3ம் சரத்து விதிமுறையை மீறியுள்ளதாக இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது ஜேசன் ரோய், தகாத வார்த்தைகளை பயன்படுத்திமையை நடுவர்கள் செவிமடுத்துள்ளனர். இதனை அறிந்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தருக்கு முறைப்பாடு செய்த நிலையில், ஜேசன் ரோய்க்கு ஒரு தரமிறக்கல் புள்ளி உட்பட போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சருக்கு, ஐசிசியின் 2.8ம் சரத்தின்படி போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் 27வது ஓவரை ஆர்ச்சர் வீசிய போது, நடுவர் வைட் பந்து ஒன்றினை வழங்கியிருந்தார். குறித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் நடந்துக்கொண்டமையால் ஆர்ச்சருக்கு மேற்குறித்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

களத்தடுப்பில் செய்த தவறே தோல்விக்குக் காரணம் – இயென் மோர்கன்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எமது வீரர்கள்..

இதற்கு அடுத்தப்படியாக தங்களது பந்துவீச்சு இன்னிங்ஸை, வழங்கப்பட்ட நேரத்திற்குள் நிறைவு செய்யாததன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதமும், வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவரை குறைவாகவே வீசியிருந்தது.

மேற்குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வீரர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், போட்டி மத்தியஸ்தர் ஜெப் க்ரொவ் மேற்குறித்த தண்டனைகளை வழங்கியுள்ளார் என்பதுடன், மேலதிக விசாரணைகள் அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<