கண்டி அணியுடன் இணைந்த விஷ்வ மற்றும் கெவின்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

343

ஹம்பாந்தோட்டையில் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொட ஆகிய இருவரும் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக கண்டி டஸ்கர்ஸ் அணியின் முகாமையாளர் பர்விஸ் மஹ்ரூப் ThePapare.com இணையத்தளத்துக்கு  தெரிவித்தார்.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (26) ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது

டேல் ஸ்டெய்ன் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு ஆட சம்மதம்

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் தற்போது ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளதுடன், அணிகள் அனைத்தும் இன்று (23) முதல் பயிற்சிகளை ஆரம்பிக்கின்றன. 

முன்னதாக லங்கா ப்ரீமியர் லீக்கில் ஒவ்வொரு அணிகளும் தலா 20 வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது

எனினும், தற்போதுள்ள கொவிட் – 19 வைரஸ் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மேலும் இரண்டு வீரர்களை இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதன்படி, குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியில் மேலும் இரண்டு இலங்கை வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Video – LPL தொடரின் ஏற்பாடுகள் பூர்த்தியா? Ravin Wickramaratne – நேர்காணல்

அண்மைக்காலமாக இலங்கை உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் பிரகாசித்து கடந்த வருடம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த 29 வயதான இடதுகை மித வேகப்பந்துவீச்சாளரான விஷ் பெர்னாண்டோ கண்டி அணியில் இடம்பிடித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்த அவர், இலங்கை வீரர்களுக்காக கடந்த 10 தினங்களாக கண்டியில் நடைபெற்ற வதிவிட பயிற்சி முகாமில் பங்கேற்றுவிட்டு நேரடியாக ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளார்.

இதேநேரம், விஷ் பெர்னாண்டோவின் சகோதரரான 21 வயதுடைய நுவனிந்து பெர்னாண்டோவும் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, இரண்டு கைகளாலும் வித்தியாசமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டுள்ள 22 வயதான லெக்ஸ்பின் சுழல்பந்துவீச்சாளரான கெவின் கொத்திகொட கண்டி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் வீரர்கள்

முன்னதாக இவர் கடந்த வருடம் அபுதாபியில் நடைபெற்ற T10 லீக் தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த இரண்டு வீரர்களும் முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இடம்பெறவில்லை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கண்டி டஸ்கர்ஸ் அணி விபரம்:

குசல் ஜனித் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், நுவன் ப்ரதீப், சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ன, கமிந்து மெண்டிஸ், டில்ருவன் பெரேரா, பியமால் பெரேரா, கவிஷ் அன்ஜுல, லசித் எம்புல்தெனிய, லஹிரு சமரகோன், சாமிகர எதிரிசிங்க, நிஷான் மதுஷங்க, ஷான் ஜயரட்ன, விஷ் பெர்னாண்டோ, கெவின் கொத்திகொட 

வெளிநாட்டு வீரர்கள்:

டேல் ஸ்டெயின், ப்ரெண்டன் டெய்லர், இர்பான் பதான், முனாப் பட்டேல், நவீன் உல் ஹக், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<