பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்த பும்ரா 

139

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா மற்றும் இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் துடுப்பாட்ட, பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (12) வெளியிட்டுள்ளது. 

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்…

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியது. குறித்த தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் வைட்வொஷ் செய்து கைப்பற்றியது. 

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடிய நிலையில், ஒரு போட்டி முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் குறித்த தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. 

இந்நிலையில், குறித்த இரு தொடர்கள் நிறைவிலும் ஒருநாள் வீரர்களுக்கான அனைத்து தரவரிசைகளிலும் முதல் 10 இடங்களுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த பல மாதங்களாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா குறித்த தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்டார். 

தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்!

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில்…

இந்நிலையில், நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா 3 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 30 ஓவர்கள் வீசியும் அவரால் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை காலமும் முதலிடத்தில் காணப்பட்ட ஜெஸ்பிரிட் பும்ரா 719 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக இரண்டாமிடத்தில் காணப்பட்ட நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 727 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நிறைவுபெற்ற குறித்த ஒருநாள் சர்வதேச தொடரில் ட்ரெண்ட் போல்ட் விளையாடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

மேலும், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் குறித்த தொடரில் விளையாடாத நியூசிலாந்து அணி வீரர்களான மெட் ஹென்றி மற்றும் லுக்கி பேர்கசன் ஆகியோர் ஒன்பதாம், பத்தாம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 645 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் ஒரு சதம், ஒரு அரைச்சதம் விளாசி முக்கிய புள்ளியாக திகழ்ந்த ரோஸ் டைலர் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 828 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருந்து நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதேவேளை, இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் ஒரு சதம், ஒரு அரைச்சதத்துடன் 187 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் இரண்டு நிலைகள் உயர்ந்து 782 தரவரிசை புள்ளிகளுடன் ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் இரண்டு இன்னிங்ஸ்களில் 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட இங்கிலாந்தின் ஜோ ரூட் எட்டமிடத்திலிருந்து 770 தரவரிசை புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியுடனான தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய கேன் வில்லியம்சன் ஏழாமிடத்திலிருந்து 773 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட பெரேரா, மாலிங்க

பிரபல கிரிக்கெட் விளையாட்டு இணையத்தளமான இ.எஸ்.பி.என். க்ரிக் இன்போ…

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த பென் ஸ்டோக்ஸ் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்து 294 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமட் நபி 301 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்திய அணியுடனான தொடரில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்கள், துடுப்பாட்டத்தில் இறுதி போட்டியில் விளாசிய அதிரடி அரைச்சதத்துடன் நியூசிலாந்து வீரர் கொலின் டி க்ரெண்ஹோம் 266 தரவரிசை புள்ளிகளை பெற்று 4 நிலைகள் உயர்ந்து நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேலும், அதே தொடரில் துடுப்பாட்டத்தில் ஒரு அரைச்சதத்துடன் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா 246 தரவரிசை புள்ளிகளை பெற்று 3 நிலைகள் உயர்ந்து ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  

ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க