Home Tamil அவிஷ்கவின் அதிரடியில் தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி

அவிஷ்கவின் அதிரடியில் தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி

Lanka Premier League 2023

227
Lanka Premier League 2023

ஜப்னா கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தம்புள்ள அவுரா அணி நடப்பு LPL தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தம்புள்ள அவுரா அணி பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் மற்றும் குசல் பெரேராவின் அபார துடுப்பாட்டமும் தம்புள்ள அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (01) மாலை நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள அவுரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜப்னா அணிக்கு சரித் அசலங்க – ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இதில் குர்பாஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தௌஹித் ஹிரிடோய் 24 ஓட்டங்களையும், பிரியமால் பெரேரா 5 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சரித் அசலங்க அரைச் சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், 56 ஓட்டங்களை எடுத்த நிலையில் சரித் அசலங்க ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் திசர பெரேரா (6), ஹர்டுஸ் வில்ஜோன் (4) சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 14 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.

பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புள்ள அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ – குசல் மெண்டிஸ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இதில் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சதீர சமரவிக்ரம 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த குசல் பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ அரைச் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் தம்புள்ள அவுரா iணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தனது ஆரம்பப் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது தோல்வியை சந்திக்க, தம்புள்ள அவுரா அணி முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் அரைச் சதம் அடித்து எல்பிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரைச் சதம் (8) அடித்த வீரர்களில் முதலிடம் பிடித்த அவிஷ்க பெர்னாண்டோவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன்மூலம் LPL தொடர் வரலாற்றில் அதிக தடவைகள் (7) ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

Result


Dambulla Aura
132/2 (16.2)

Jaffna Kings
129/7 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kusal Mendis b Binura Fernando 14 12 3 0 116.67
Charith Asalanka c Dhananjaya de Silva b Noor Ahmad  56 52 5 1 107.69
Towhid Hridoy c Alex Ross b Dhananjaya de Silva 24 20 2 0 120.00
Priyamal Perera lbw b Shahnawaz Dahani 5 3 1 0 166.67
David Miller c Janith Liyanage b Hayden Kerr 14 18 1 0 77.78
Thisara Perera run out (Shahnawaz Dahani) 6 5 1 0 120.00
Hardus Viljoen b Binura Fernando 4 6 1 0 66.67
Dunith Wellalage not out 0 1 0 0 0.00
Maheesh Theekshana not out 2 3 0 0 66.67


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 129/7 (20 Overs, RR: 6.45)
Bowling O M R W Econ
Binura Fernando 4 1 27 2 6.75
Shahnawaz Dahani 4 0 36 1 9.00
Hayden Kerr 3 0 16 1 5.33
Dhananjaya de Silva 4 0 17 1 4.25
Noor Ahmad  4 0 27 1 6.75
Ravindu Fernando  1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando b Vijayakanth Viyaskanth 52 32 6 3 162.50
Kusal Mendis c Thisara Perera b Dunith Wellalage 29 23 4 1 126.09
Sadeera Samarawickrama not out 12 22 0 0 54.55
Kusal Janith not out 34 22 3 2 154.55


Extras 5 (b 0 , lb 2 , nb 1, w 2, pen 0)
Total 132/2 (16.2 Overs, RR: 8.08)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 2 0 22 0 11.00
Dunith Wellalage 4 0 27 1 6.75
Maheesh Theekshana 4 0 23 0 5.75
Hardus Viljoen 1 0 20 0 20.00
Vijayakanth Viyaskanth 4 0 24 1 6.00
Charith Asalanka 1.2 0 14 0 11.67



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<