பாடசாலை U19 டிவிஷன் 3 அரையிறுதிக்கு முன்னேறி யாழ். மத்திய கல்லூரி!

U19 SCHOOLS CRICKET TOURNAMENT 2020/22

106

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான U19 டிவிசன் 3 போட்டித்தொடரின், எந்தேரமுல்ல சென். ஜோசப் கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொழும்பு கோட்டை ஆனந்த சாஸ்திராலயா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அணிக்கு தலா 38 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோசப் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, களமிறங்கிய சென். ஜோசப் கல்லூரி அணியின் சார்பாக, வினோத் வீரசேகர 12 ஓட்டங்களையும், டளஸ் குணசேகர 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, 27.4 ஓவர்கள் நிறைவில், 61 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

யாழ். மத்திய கல்லூரி அணிசார்பாக, அஜய் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இந்துஜன், கவிதர்ஷன் மற்றும் கௌதம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணியின் சார்பாக, சாரங்கன் மற்றும் விதுஷன் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் விளையாட, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில், சாரங்கன் 31 ஓட்டங்களையும், விதுஷன் 17 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, இந்த போட்டியில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி எதிர்வரும் 27ம் திகதி அரையிறுதிப்போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<