Home Tamil மெண்டிஸின் சாதனை இரட்டைச் சதத்தோடு முதல் டெஸ்ட்டில் முன்னேறும் இலங்கை

மெண்டிஸின் சாதனை இரட்டைச் சதத்தோடு முதல் டெஸ்ட்டில் முன்னேறும் இலங்கை

872
Ireland tour of Sri Lanka 2023

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது குசல் மெண்டிஸ் மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரது அபார இரட்டைச் சதங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது.

காலி மைதானத்தில் சாதனைகளை குவித்த இலங்கை அணி

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (26) நிறைவுக்கு வந்த போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 357 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த நிஷான் மதுஷ்க 149 ஓட்டங்களோடும், குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களோடும் காணப்பட்டிருந்தனர்.

இன்று (27) அயர்லாந்தை விட 135 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க முதலாவதாக டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கன்னி இரட்டைச் சதத்துடன் நம்பிக்கை வழங்கினார். எனினும் நான்காம் நாளின் மதிய போசணத்தின் பின்னர் அவரது விக்கெட் பறிபோனது. என்டி மெக்பிரைனின் சுழல் பந்துவீச்சில் LBW முறையில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்த மதுஷ்க 22 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 205 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மதுஷ்க இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக குசல் மெண்டிஸ் உடன் இணைந்து 268 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் குசல் மெண்டிஸ் உம் டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற கன்னி இரட்டைச் சதத்துடன் இலங்கைத் தரப்பினை பலப்படுத்தியிருந்ததோடு இலங்கை அணி மெண்டிஸின் இரட்டைச்சத உதவியுடன் அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸ் (492) ஓட்டங்களையும் கடந்தது.

இதனையடுத்து நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. கிரஹம் ஹூமேவின் பந்துவீச்சில் பிடிகொடுப்பை வழங்கி ஆட்டமிழந்த மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்ஸோடு 291 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 245 ஓட்டங்கள் எடுத்தார். மெண்டிஸ் இந்த போட்டி மூலம் டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இலங்கை அணி துடுப்பாட்டவீரராக சாதனை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 133 ஓட்டங்களை அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து பகிர்ந்திருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.

குசல் மெண்டிஸின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக தினேஷ் சந்திமால் களம் வந்த போதும் அவர் தோற்பட்டை உபாதை காரணமாக மைதானத்தினை விட்டு 13 ஓட்டங்களோடு வெளியேறினார். எனினும் இலங்கை அணியினை அஞ்செலோ மெதிவ்ஸ் நான்காம் நாளின் தேநீர் இடைவேளை தாண்டி வலுப்படுத்தியதோடு மெதிவ்ஸ் சதம் பூர்த்தி செய்ய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் எடுத்திருந்தவாறு இடைநிறுத்தியது. அத்துடன் இது காலி மைதானத்தில் அணியொன்று டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் பதிவானது.

IPL தொடரிலிருந்து வெளியேறும் வொசிங்டன் சுந்தர்!

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 15ஆவது டெஸ்ட் சதத்தோடு 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார்.

அயர்லாந்து பந்துவீச்சில் கிரஹம் ஹூமே, அண்டி மெக்பிரைன் மற்றும் கேர்டிஸ் கேம்பர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து 212 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த அயர்லாந்து அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

தற்போது இலங்கையை விட 158 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படும் அயர்லாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அன்ட்ரூ பல்பைர்னி 18 ஓட்டங்களையும், ஹர்ரி டெக்டர் 7 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்.

இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
704/3 (151)

Ireland
492/10 (145.3) & 202/10 (77.3)

Batsmen R B 4s 6s SR
James McCollum c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 10 28 2 0 35.71
Peter Moor lbw b Asitha Fernando  5 7 1 0 71.43
Andy Balbirnie c Dhananjaya de Silva b Ramesh Mendis 95 163 14 0 58.28
Harry Tector c Dinesh Chandimal b Prabath Jayasuriya 18 44 3 0 40.91
Paul Stirling c Dhananjaya de Silva b Asitha Fernando  103 181 9 4 56.91
Lorcan Tucker b Vishwa Fernando 80 106 10 0 75.47
Curtis Campher c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 111 229 15 2 48.47
Andy McBrine c & b 35 59 3 1 59.32
Graham Hume lbw b Prabath Jayasuriya 6 23 1 0 26.09
Matthew Humphreys c & b 7 23 0 0 30.43
Ben White not out 0 11 0 0 0.00


Extras 22 (b 9 , lb 11 , nb 1, w 1, pen 0)
Total 492/10 (145.3 Overs, RR: 3.38)
Bowling O M R W Econ
Vishwa Fernando 24 1 92 2 3.83
Asitha Fernando  22 4 78 2 3.55
Prabath Jayasuriya 58.3 13 174 5 2.98
Ramesh Mendis 27 4 108 1 4.00
Dhananjaya de Silva 14 5 20 0 1.43
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka lbw b Andy McBrine 205 339 22 1 60.47
Dimuth Karunaratne c Matthew Humphreys b Curtis Campher 115 133 15 0 86.47
Kusal Mendis c Matthew Humphreys b Graham Hume 245 291 18 11 84.19
Angelo Mathews not out 100 114 6 4 87.72
Dinesh Chandimal not out 13 14 2 0 92.86
Dhananjaya de Silva not out 12 17 2 0 70.59


Extras 14 (b 2 , lb 8 , nb 2, w 2, pen 0)
Total 704/3 (151 Overs, RR: 4.66)
Bowling O M R W Econ
Graham Hume 22 3 87 1 3.95
Andy McBrine 57 8 191 1 3.35
Curtis Campher 20 1 101 1 5.05
Matthew Humphreys 10 0 67 0 6.70
Ben White 34 1 203 0 5.97
Harry Tector 8 0 45 0 5.62


Batsmen R B 4s 6s SR
James McCollum b Ramesh Mendis 10 16 2 0 62.50
Peter Moor c Angelo Mathews b Prabath Jayasuriya 19 39 1 2 48.72
Andy Balbirnie c Angelo Mathews b Ramesh Mendis 46 101 5 0 45.54
Harry Tector b Asitha Fernando  85 189 8 3 44.97
Paul Stirling c Kusal Mendis b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Lorcan Tucker b Asitha Fernando  13 23 2 0 56.52
Curtis Campher c Kusal Mendis b Ramesh Mendis 12 33 2 0 36.36
Andy McBrine c Dhananjaya de Silva b Ramesh Mendis 10 19 2 0 52.63
Graham Hume c Sadeera Samarawickrama b Ramesh Mendis 0 8 0 0 0.00
Matthew Humphreys not out 4 31 1 0 12.90
Ben White b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 202/10 (77.3 Overs, RR: 2.61)
Bowling O M R W Econ
Vishwa Fernando 6 1 15 0 2.50
Prabath Jayasuriya 32 9 88 2 2.75
Ramesh Mendis 27 6 64 5 2.37
Asitha Fernando  11.3 3 30 3 2.65
Dhananjaya de Silva 1 0 3 0 3.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<