Home Tamil திமுத் – மெண்டிஸ் இணைப்பாட்டத்துடன் முதல் நாளில் வலுப்பெற்ற இலங்கை

திமுத் – மெண்டிஸ் இணைப்பாட்டத்துடன் முதல் நாளில் வலுப்பெற்ற இலங்கை

606

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது திமுத் கருணாரட்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தோடு பலம் பெற்றிருக்கின்றது.

>>இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கே வரலாற்று முக்கியத்துவமிக்க இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தார். இப்போட்டிக்கான இலங்கை அணி சதீர சமரவிக்ரம மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோருக்கு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, பிரபாத் ஜயசூரிய, ரமேஸ் மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ

அயர்லாந்து குழாம்

ஜேம்ஸ் மெக்கொல்லம், முர்ரே கம்மின்ஸ், அன்ட்ரூ பல்பைர்னி (தலைவர்), ஹர்ரி டெக்டர், கேர்டிஸ் கேம்பர், பீடர் மூர், லோர்கன் டக்கர், ஜோர்ஜ் டக்ரல், அன்டி மெக்பிரைன், மார்க் அடைர், பென்ஜமின் வைட்

இதன் பின்னர் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரட்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொடுத்தது. இரு வீரர்களும் அணியின் முதல் விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த நிஷான் மதுஷ்க கேர்டிஸ் கேம்பரின் பந்துவீச்சில் 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் முதல் நாளின் மதிய போசணம், தேநீர் இடைவேளை என அனைத்தினையும் கடந்து மிகப் பெரிய இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கியதோடு சதங்களையும் விளாசினர்.

பின்னர் 281 ஓட்டங்கள் வரை நீடித்த இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் முதல் நாளின் மூன்றாம் இடைவெளியில் குசல் மெண்டிஸின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. ஜோர்ஜ் டக்ரலின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் தன்னுடைய 8ஆவது டெஸ்ட் சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 18 பௌண்டரிகள் அடங்கலாக 140 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் பின்னர் துரித கதியில் இரு விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணிக்கு  திமுத் கருணாரட்னவின் விக்கெட் முதல் நாளில் பறிபோன இறுதி விக்கெட்டாக மாறியது. அதற்கு முன்னர் அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் ஏமாற்றினார். திமுத் கருணாரட்ன தன்னுடைய 15ஆவது டெஸ்ட் சதத்துடன் 15 பௌண்டரிகள் அடங்கலாக 179 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

>>பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரில் மூன்றாவது வெற்றி

தொடர்ந்து குசல் – திமுத் பெற்ற சதங்களின் உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணியானது போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 386 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கும் தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 12 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.

மறுமுனையில் அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடைர், கேர்டிஸ் கேம்பர், பென் வைட் மற்றும் ஜோர்ஜ் டொக்ரல் ஆகியோர் முதல் நாளில் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
591/6 (131)

Ireland
143/10 (52.3) & 168/10 (54.1)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Lorcan Tucker b Curtis Campher 29 48 4 0 60.42
Dimuth Karunaratne c Lorcan Tucker b Mark Adair 179 235 15 0 76.17
Kusal Mendis lbw b George Dockrell 140 193 18 1 72.54
Angelo Mathews c Lorcan Tucker b Ben White 0 3 0 0 0.00
Dinesh Chandimal not out 102 155 12 0 65.81
Prabath Jayasuriya lbw b Curtis Campher 16 23 3 0 69.57
Dhananjaya de Silva lbw b Andy McBrine 12 16 3 0 75.00
Sadeera Samarawickrama not out 104 114 11 0 91.23


Extras 9 (b 4 , lb 3 , nb 1, w 1, pen 0)
Total 591/6 (131 Overs, RR: 4.51)
Bowling O M R W Econ
Mark Adair 24.3 3 95 1 3.91
Curtis Campher 21 2 84 2 4.00
Andy McBrine 40 2 162 1 4.05
Ben White 22 0 119 1 5.41
George Dockrell 21.3 0 112 1 5.26
Harry Tector 2 0 12 0 6.00
Batsmen R B 4s 6s SR
James McCollum b Prabath Jayasuriya 35 85 5 0 41.18
Murray Commins b Vishwa Fernando 0 1 0 0 0.00
Andy Balbirnie c Nishan Madushka b Vishwa Fernando 4 4 1 0 100.00
Harry Tector c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 34 59 0 1 57.63
Curtis Campher c Ramesh Mendis b Prabath Jayasuriya 0 2 0 0 0.00
Peter Moor c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 14 29 2 0 48.28
Lorcan Tucker lbw b Prabath Jayasuriya 45 73 7 0 61.64
George Dockrell lbw b Prabath Jayasuriya 2 24 0 0 8.33
Andy McBrine lbw b Ramesh Mendis 7 35 1 0 20.00
Mark Adair st Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 0 2 0 0 0.00
Ben White not out 0 3 0 0 0.00


Extras 2 (b 0 , lb 0 , nb 2, w 0, pen 0)
Total 143/10 (52.3 Overs, RR: 2.72)
Bowling O M R W Econ
Asitha Fernando  5 2 9 0 1.80
Vishwa Fernando 9 2 38 2 4.22
Prabath Jayasuriya 23 10 52 7 2.26
Ramesh Mendis 14.3 3 40 1 2.80
Dhananjaya de Silva 1 0 4 0 4.00


Batsmen R B 4s 6s SR
James McCollum c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 8 28 0 0 28.57
Murray Commins c Ramesh Mendis b Vishwa Fernando 0 3 0 0 0.00
Andy Balbirnie c Dhananjaya de Silva b Vishwa Fernando 6 16 1 0 37.50
Harry Tector run out (Sadeera Samarawickrama) 42 95 4 0 44.21
Lorcan Tucker lbw b Prabath Jayasuriya 6 10 1 0 60.00
Peter Moor c Nishan Madushka b Ramesh Mendis 0 5 0 0 0.00
Curtis Campher c Nishan Madushka b Ramesh Mendis 30 73 5 0 41.10
George Dockrell lbw b Ramesh Mendis 32 54 6 0 59.26
Andy McBrine c Kusal Mendis b Ramesh Mendis 10 11 2 0 90.91
Mark Adair not out 23 29 3 0 79.31
Ben White lbw b Prabath Jayasuriya 1 2 0 0 50.00


Extras 10 (b 5 , lb 3 , nb 1, w 1, pen 0)
Total 168/10 (54.1 Overs, RR: 3.1)
Bowling O M R W Econ
Prabath Jayasuriya 24.1 6 56 3 2.32
Vishwa Fernando 4 2 3 2 0.75
Ramesh Mendis 20 1 76 4 3.80
Asitha Fernando  3 0 15 0 5.00
Dhananjaya de Silva 3 0 10 0 3.33



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<