Home Tamil விதுசன், அஸ்நாத்தின் அபார பந்துவீச்சுடன் முன்னேறும் சென். ஜோன்ஸ் கல்லூரி

விதுசன், அஸ்நாத்தின் அபார பந்துவீச்சுடன் முன்னேறும் சென். ஜோன்ஸ் கல்லூரி

115th Battle of the North 2022

286
 

யாழ். மத்தியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 115வது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாளான இன்று (22) தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்திருந்த யாழ். மத்தியக் கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அதேநேரம், 42 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்து இன்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்று, 171 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.

பந்துவீச்சாளர்களின் அபாரத்துடன் வடக்கின் பெரும் சமரை ஆரம்பித்த யாழ். மத்தி!

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 167 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆறு ஓட்டங்களுடன் இன்றைய தினம் மத்தியக் கல்லூரி அணி விக்கெட்டிழப்பின்றி ஆட்டத்தை ஆரம்பித்தது.

மத்தியக் கல்லூரி அணி 25 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தன்னுடைய ஒரே ஓவரில் (14வது ஓவர்) யோகதாஸ் விதுசன் அபாரமான பந்துவீச்சினால் ஜெயதீஸ்வரன் விதுசன், ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் மதீஷ்வரன் சன்சஜன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 25 ஓட்டங்களுக்கு மத்தியக் கல்லூரியின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. தொடர்ந்து 18வது ஓவரில் தகுதாஸ் அபிலாஷின் விக்கெட்டினையும் விதுசன் கைப்பற்றினார்.

இவ்வாறு தொடர்ச்சியாக மத்தியக் கல்லூரி அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது. எனினும் ஸ்ரீதரன் சாரங்கன் மற்றும் விநாயகசெல்வம் கவிதர்ஷன் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். இதன்காரணமாக மதியபோசன இடைவேளையின் போது, மத்தியக் கல்லூரி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் சாரங்கன் மற்றும் கவிதர்ஷன் ஆகியோர் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 44 ஓட்டங்களை பகிர்ந்தனர். மீண்டும் பந்துவீச்சில் அபாரம் காண்பித்த விதுசன் கவிதர்ஷனை வெளியேற்றினார்.

விதுசன் ஒரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்திவந்த நிலையில், மறுமுனையில் ஜெயச்சந்திரன் அஸ்நாத் விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கினார். அஸ்நாத்தின் பந்துவீச்சில் 41 ஓட்டங்களை பெற்றிருந்த சாரங்கன் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆனந்தன் கஜன் தனியாளாக போராடினார். இறுதியில் கஜன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சை பொருத்தவரை விதுசன் மற்றும் அஸ்நாத் ஆகியோர் 10 விக்கெட்டுகளையும் பகிர்ந்துக்கொண்டனர். விதுசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அஸ்நாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 42 ஓட்டங்கள் முன்னிலையுடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 171 ஓட்டங்களால் முன்னிலையையும் பெற்றுள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரியை பொருத்தவரை, சச்சின் கணபதி மற்றும் கரிஷன் ஆகியோர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்த போதும், மத்தியவரிசையில் எபனீசர் ஜெசில், கமலபாலன் சபேசன் மற்றும் அந்தோனிபிள்ளை சுகேதன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இன்றைய ஆட்டநேர நிறைவுவரை களத்தில் நின்ற சபேசன் 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஜெசில் 35 ஓட்டங்களையும், சுகேதன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். பந்துவீச்சில் நியூட்டன் 2 விக்கெட்டுகளையும், கௌதம் மற்றும் கஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

சுருக்கம்

  • யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 167/10 (84.1), கரிஷன் 41, அபிஷேக் 40, கவிதர்ஷன் 41/3, விதுசன் 13/3, நியூட்டன் 50/1, கௌதம் 27/1
  • யாழ். மத்தியக் கல்லூரி –125/10 (45), சாரங்கன் 41, அஜய் 28*, விதுசன் 48/6, அஸ்நாத் 46/4
  • யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி (2வது இன்னிங்ஸ்) – 129/4 (46), சபேசன் 45*, ஜெசில் 35, சுகேதன் 34, நியூட்டன் 35/2

முடிவு – சென்.ஜோன்ஸ் கல்லூரி 171 ஓட்டங்களால் முன்னிலை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Jaffna Central College
125/10 (45) & 163/10 (62.3)

St. John’s College, Jaffna
167/10 (84.1) & 220/7 (67)

Batsmen R B 4s 6s SR
Anderson Sachin Kanapathi b Jayatheeswaran Vithusan 20 125 0 0 16.00
Kuganeswaran Karisan run out (Matheeswaran Sansayan) 41 89 0 0 46.07
Nesakumar Ebenezer Jezial st Sritharan Sarankan b Vinajakaselvam Kavitharsan 16 51 0 0 31.37
Antonypillai Sukethan c Matheeswaran Sansayan b Jayatheeswaran Vithusan 11 17 0 0 64.71
Kamalapalan Sabesan lbw b Vinajakaselvam Kavitharsan 0 1 0 0 0.00
Jeyachandran Ashnath run out (Matheeswaran Sansayan) 0 33 0 0 0.00
Sangeeth Greme Smith c Sritharan Sarankan b Jayatheeswaran Vithusan 0 4 0 0 0.00
Anton Abishek b Rajithkumar Newton 40 52 0 0 76.92
Kajenthira Thamilkkathir Abiranchan c Sritharan Sarankan b Thileapkumar Gowthem 11 63 0 0 17.46
Vithushan Yogathas not out 3 60 0 0 5.00
Kirupananthan Kajakarnan c Matheeswaran Sansayan b Thileapkumar Gowthem 1 18 0 0 5.56


Extras 24 (b 14 , lb 0 , nb 8, w 2, pen 0)
Total 167/10 (84.1 Overs, RR: 1.98)
Bowling O M R W Econ
Rajithkumar Newton 20 3 50 1 2.50
Thileapkumar Gowthem 25 12 27 1 1.08
Jayatheeswaran Vithusan 14 1 41 3 2.93
Ananthan Kajan 7 3 8 0 1.14
Sutharsan Anusanth 6 1 13 0 2.17
Vinajakaselvam Kavitharsan 11.1 4 13 3 1.17
Nishan Sathakaran 1 0 1 0 1.00
Batsmen R B 4s 6s SR
Thakuthash Abilash c Nesakumar Ebenezer Jezial b Yogathas Vithushan 14 54 0 0 25.93
Jayatheeswaran Vithusan c Anton Abishek b Yogathas Vithushan 10 40 0 0 25.00
Rajithkumar Newton c Kajenthira Thamilkkathir Abiranchan b Yogathas Vithushan 0 2 0 0 0.00
Matheeswaran Sansayan c Nesakumar Ebenezer Jezial b Yogathas Vithushan 0 1 0 0 0.00
Vinajakaselvam Kavitharsan c Kamalapalan Sabesan b Yogathas Vithushan 3 59 0 0 5.08
Sritharan Sarankan c Kajenthira Thamilkkathir Abiranchan b Jeyachandran Ashnath 41 44 0 0 93.18
Nisanthan Ajay not out 28 41 0 0 68.29
Ananthan Kajan c Yogathas Vithushan b Jeyachandran Ashnath 9 18 0 0 50.00
Sagathevan Sayanthan b Jeyachandran Ashnath 0 1 0 0 0.00
Thileapkumar Gowthem c Kamalapalan Sabesan b Yogathas Vithushan 5 5 0 0 100.00
Sutharsan Anusanth c Kuganeswaran Karisan b Jeyachandran Ashnath 0 9 0 0 0.00


Extras 15 (b 10 , lb 1 , nb 4, w 0, pen 0)
Total 125/10 (45 Overs, RR: 2.78)
Bowling O M R W Econ
Kirupananthan Kajakarnan 7 1 14 0 2.00
Anton Abishek 2 1 5 0 2.50
Yogathas Vithushan 20 5 48 6 2.40
Kajenthira Thamilkkathir Abiranchan 3 2 1 0 0.33
Jeyachandran Ashnath 13 4 46 0 3.54
Batsmen R B 4s 6s SR
Anderson Sachin Kanapathi c Sagathevan Sayanthan b Rajithkumar Newton 0 10 0 0 0.00
Kuganeswaran Karisan b Thileapkumar Gowthem 0 7 0 0 0.00
Nesakumar Ebenezer Jezial c Sritharan Sarankan b Ananthan Kajan 35 131 0 0 26.72
Antonypillai Sukethan c Thileapkumar Gowthem b Rajithkumar Newton 34 59 0 0 57.63
Kamalapalan Sabesan c Thileapkumar Gowthem b Rajithkumar Newton 105 116 0 0 90.52
Jeyachandran Ashnath c Matheeswaran Sansayan b Ananthan Kajan 7 62 0 0 11.29
Anton Abishek c Ananthan Kajan b Thileapkumar Gowthem 22 18 0 0 122.22
Sangeeth Greme Smith not out 3 2 0 0 150.00


Extras 14 (b 6 , lb 4 , nb 3, w 1, pen 0)
Total 220/7 (67 Overs, RR: 3.28)
Bowling O M R W Econ
Rajithkumar Newton 22 4 64 3 2.91
Thileapkumar Gowthem 15 3 36 2 2.40
Jayatheeswaran Vithusan 7 2 25 0 3.57
Vinajakaselvam Kavitharsan 2 0 15 0 7.50
Nisanthan Ajay 4 0 9 0 2.25
Sutharsan Anusanth 4 0 17 0 4.25
Ananthan Kajan 13 3 37 2 2.85


Batsmen R B 4s 6s SR
Thakuthash Abilash lbw b Yogathas Vithushan 3 10 0 0 30.00
Jayatheeswaran Vithusan c Jeyachandran Ashnath b Kirupananthan Kajakarnan 0 8 0 0 0.00
Rajithkumar Newton c Kamalapalan Sabesan b Jeyachandran Ashnath 10 29 0 0 34.48
Thileapkumar Gowthem c Kuganeswaran Karisan b Kirupananthan Kajakarnan 1 15 0 0 6.67
Amuthanathan Jeroroshan c Kamalapalan Sabesan b Jeyachandran Ashnath 53 97 0 0 54.64
Sritharan Sarankan c Anderson Sachin Kanapathi b Jeyachandran Ashnath 33 46 0 0 71.74
Nisanthan Ajay c Kamalapalan Sabesan b Jeyachandran Ashnath 2 19 0 0 10.53
Matheeswaran Sansayan lbw b Jeyachandran Ashnath 27 92 0 0 29.35
Vinajakaselvam Kavitharsan c Nesakumar Ebenezer Jezial b Jeyachandran Ashnath 0 1 0 0 0.00
Sagathevan Sayanthan c Yogathas Vithushan b Anton Abishek 17 55 0 0 30.91
Sutharsan Anusanth not out 0 11 0 0 0.00


Extras 17 (b 8 , lb 1 , nb 8, w 0, pen 0)
Total 163/10 (62.3 Overs, RR: 2.61)
Bowling O M R W Econ
Anton Abishek 9 2 19 0 2.11
Yogathas Vithushan 20 1 57 2 2.85
Kirupananthan Kajakarnan 5 1 5 2 1.00
Jeyachandran Ashnath 23.3 5 70 6 3.00
Kuganeswaran Karisan 2 1 1 0 0.50
Kajenthira Thamilkkathir Abiranchan 3 0 2 2 0.67