பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

117

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 21ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியினை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

தொடரில் இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த ரோயல் செலஞ்சர்ஸ்

மேலும் இந்த வெற்றியுடன் 2023ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தம்முடைய மூன்றாவது வெற்றியினையும் பதிவு செய்து கொள்கின்றது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டி சனிக்கிழமை (15) லக்னோவ் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியை துடுப்பாட பணித்திருந்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் கே.எல். ராகுல் 56 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த அதன் பதில் தலைவர் சேம் கரன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ககிஸோ றபாடா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும் இறுதியில் ஷாருக் கான் மற்றும் சிக்கந்தர் ரஷாவின் பொறுப்பான ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சிக்கந்தர் ரஷா 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக தன்னுடைய கன்னி IPL அரைச்சதத்தோடு 57 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஷாருக் கான் இறுதிநேர அதிரடி காட்டி 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேவேளை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் யுத்வீர் சிங் சராக், ரவி பிஸ்னோய் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிக்கந்தர் ரஷா பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் – 159/8 (20) கே.எல். ராகுல் 74(56), சேம் கரன் 31/3(4), ககிஸோ றபாடா 34/2(4)

பஞ்சாப் கிங்ஸ் – 161/8 (19.3) சிக்கந்தர் ரஷா 57(41), ஷாருக் கான் 23(10), யுத்வீர் சிங் சராக் 19/2(3), ரவி பிஸ்னோய் 18/2(2.3), மார்க் வூட் 35/2(4)

முடிவு – பஞ்சாப் கிங்ஸ் அணியானது 2 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<