ரசிகர்களின் தனிப்பட்ட விமர்சனங்களால் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் ஓய்வு

301
Sardar Azmoun

ஈரானின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் 23 வயதாகும் ஈரான் தேசிய கால்பந்து அணி வீரர் சர்தார் அஸ்மென், சர்வதேசப் கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை

நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து கழகமான ஏ.சி. மிலானுக்கு….

பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து, நொக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில் பி பிரிவில் இருந்து ஈரான் முதல் சுற்றுடன் வெளியேறியது. மிகவும் வலுவான அணிகள் கொண்ட இந்தப் பிரிவில் ஈரான் தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோவை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் ஸ்பெயினிடம் 1-0 என தோல்வி அடைந்தது. இறுதியாக நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்த்துக்கல் அணியுடன் 1-1 என சமநிலையில் முடிவுற்றது. இதன்படி, குழு மட்டத்தில் நான்கு புள்ளிகளைப் பெற்ற ஈரான் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.

அந்த அணியில் 23 வயதான முன்கள வீரரான சர்தார் அஸ்மென் இடம்பிடித்திருந்தார். இவர் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச்சுற்றின் போது அந்த அணிக்காக அதிக கோல்கள் (11) அடித்த வீரராவார். ஆனால், உலகக் கிண்ண தொடரில் மூன்று போட்டியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் அவரை அவதூறாக திட்டினார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சர்தான் ஈரான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக….

தனது 18 ஆவது வயதில் புகழ்பெற்ற கழக அணிகளுக்காக விளையாட ஆரம்பித்த அவர், இந்த முடிவு எடுத்ததற்கான உருக்கமான காரணத்தையும் கூறியுள்ளார்.

சர்தார் அஸ்மென் தனது டுவிட்டர் பதிவில், ‘தேசிய அணிக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாகும். இது எனது வாழ்நாள் முழுவதும் பெருமை அளிக்கக்கூடியதாகும். துரதிஷ்டவசமாக தேசிய அணியில் இருந்து விடைபெறும் முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது. 23 வயதிலேயே எனது வாழ்க்கையில் முக்கியமான, மிகவும் வேதனைக்குரிய முடிவை எடுத்து இருக்கிறேன்.

எனது தாயார் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் சில இரக்கமற்ற நபர்களின் செயல்களாலும், அவமரியாதையினாலும் வேறுவழியின்றி இந்த ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதானது. தாய்நாடா, தாயா என்ற இக்கட்டான நிலையில் நான் தாய் தான் முக்கியம் என்று முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தனது 15ஆவது வயதில் கால்பந்து வாழ்க்கைக்கு காலடி வைத்த சர்தார் அஸ்மென், ரஷ்யாவின் ரூபின் கசான் கழகத்துக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், 2014இல் ஈரான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட அவர், 2015இல் ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் முதற்தடவையாகக் களமிறங்கினார். அத்துடன், ஈரான் சார்பாக அதிகூடிய கோல்களைப் பெற்றுக்கொண்ட 5ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.