அதிரடி துடுப்பாட்டத்துடன் பஞ்சாபை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

142

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 46ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த மதீஷ, தீக்ஷன

அத்தோடு இந்த வெற்றியுடன் இம்முறை IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தம்முடைய 5ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடம் பிடிக்க, இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரில் ஐந்தாவது தோல்வியாக மாறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (02) மொஹாலியில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரின் அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்கள் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சுழல்வீரரான பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் மிக்க 215 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் அணித்தலைவர் ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினைப் பறிகொடுத்து தடுமாறியது. எனினும் புதிய வீரர்களாக களம் வந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் நிதானம் கலந்த அதிரடியோடு தமது தரப்பிற்கு கைகொடுத்தனர்.

இலங்கை U23 அபிவிருத்தி குழாத்தில் இடம்பிடித்த தீசன் விதுசன்- 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களுடன் அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டம் சார்பில் இஷான் கிஷன் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் எடுக்க, சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்றார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் நேதன் எல்லிஸ் 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த இஷான் கிஷன் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் – 214/3 (20) லியாம் லிவிங்ஸ்டோன் 82(44)*, ஜித்தேஷ் சர்மா 49(27)*, பியூஸ் சாவ்லா 29/2 (4)

மும்பை இந்தியன்ஸ் – 216/4 (18.5) இஷான் கிஷன் 75(41), சூர்யகுமார் யாதவ் 66(31), நேதன் எல்லிஸ் 34/2(4)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 06 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<