IPL அரைச்சதம், சிக்ஸர்களில் கோஹ்லி புதிய சாதனை

159
Virat Kohli
Image Courtesy - BCCI

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

பரபரப்பாக நடைபெற்று வருகின்ற .பி.எல் லீக் போட்டிகளுக்கிடையில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதில் டுபாயில் நேற்று (25) நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது

>> IPL தொடரில் புதிய வரலாறு படைத்த மொஹமட் சிராஜ்

முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை எடுத்தது. 

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித் தலைவர் விராட் கோஹ்லி ஒரு சிக்ஸர், 4 பௌண்டரி உட்பட 50 ஓட்டங்கனை எடுத்து .பி.எல் அரங்கில் 39ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்

இதன்மூலம், அதிக அரைச்சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவானின் சாதனையை கோஹ்லி சமன் செய்தார். இந்தப் பட்டியலில் டேவிட் வோர்னர் 46 அரைச்சதங்களுடன் முதலிட்டத்தில் உள்ளார்.

அத்துடன், அவர் அடித்த சிக்ஸரானது .பி.எல் கிரிக்கெட்டில் பெற்றுக்கொண்ட 200ஆவது சிக்ஸராகும். இதன்மூலம், 200 சிக்ஸர்கள் அடிக்கும் 5ஆவது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார். மேலும், இந்த மைல்கல்லை எட்டும் 3ஆவது இந்திய வீரராகவும் அவர் இடம்பிடித்தார்

>> சர்ச்சைகளால் வலம்வந்த IPL முதல்பாதி ஆட்டங்கள்

முன்னதாக, .பி.எல் இல் கிறிஸ் கெயில் 336 சிக்ஸர்களையும், ஏபி டி வில்லியர்ஸ் 231 சிக்ஸர்களையும் எம்.எஸ் டோனி 216 சிக்ஸர்களையும் ரோஹித் சர்மா 209 சிக்ஸர்களையும் அடித்துள்ள நிலையில், தற்போது விராட் கோஹ்லி தனது 200வது சிக்ஸ்ரை இந்தப் போட்டியின் மூலம் பூர்த்தி செய்துள்ளார்

இதனிடையே, சென்னை அணிக்கு எதிராக 50 ஓட்டங்களை எடுத்த கோஹ்லி, இம்முறை .பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்

இவர் 11 போட்டியில் 415 ஓட்டங்களை எடுத்துள்ளார். முதலிரு இடங்களில் பஞ்சாப் அணியின் கே.எல் ராகுல் (567 ஓட்டங்கள்), டெல்லியின் ஷிகர் தவான் (471 ஓட்டங்கள்) உள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<