IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி

316
BCCI

இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை IPL தொடர் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அத்துடன், IPL கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முதல்முறையாக .பி.எல். ஆட்சிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது

ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?

கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த .பி.எல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனோ பரவல் வீரியம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன

இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு கொரோனோவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேசப் போட்டியை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக .பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியது.

முன்னதாக .பி.எல். போட்டியை நடத்த T20 உலகக் கிண்ணம், ஆசிய கிண்ணம் ஆகிய தொடர்கள் தடையாக இருந்தன. எனினும், ஒக்டோபரில் தொடங்கவிருந்த T20 உலகக் கிண்ணத்தையும், செப்டம்பரில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணத்தையும் ஒத்திவைப்பதாக தீர்மானிக்கப்பட்டது

இதனையடுத்து, கொவிட் – 19 வைரஸ் தொற்றால் இந்த வருடத்துக்கான .பி.எல் T20 லீக்கை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் .பி.எல் தொடர் நடைபெறும் என .பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெறும் .பி.எல் ஆட்சிமன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, போட்டி அட்டவணை மற்றும் கொவிட் – 19 பாதுகாப்பு தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்து .பி.எல். ஆட்சிமன்றக் குழு நேற்று (02) ஆலோசனை நடத்தியது

வீடியோ காணொளி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் .பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எனவே இந்த கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு இராட்சியத்தில் .பி.எல் தொடரை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டிகள் செப்டம்பர் 19ஆம் திகதி தொடங்கி நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை

மேலும், எதிர்வரும் 26ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு இராட்சியம் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான .பி.எல் லீக்கை நடத்துவதற்கும் இந்த கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில முக்கியமான முடிவுகளின் விபரங்கள் வருமாறு:-

  • .பி.எல். போட்டி செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நவம்பர் 10ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக .பி.எல் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை தான் நடைபெறும். முதல்முறையாக இம்முறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10ஆம் திகதி) இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
  • கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • சீனாவின் கையடக்கத் தொலைபேசி நிறுவனமான விவோ உள்ளிட்ட எல்லா அனுசரணையாளர்களையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • வழமையாக இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும். மொத்தம் 10 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன

இதுஇவ்வாறிருக்க, .பி.எல். போட்டியை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடத்துவதற்கு இந்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆனால் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் T20 போட்டிகளில் விளையாட தயாராகும் பங்களாதேஷ்

மேலும், இந்தக் கூட்டத்தில் மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் ஆட்சிமன்ற குழு கூடி பல்வேறு முடிவுகளை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

குறிப்பாக, வீரர்களைத் தனிமைப்படுத்துவது, ஐ.பி.எல் குழுவினருக்கு மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது, பயிற்சிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், வீரர்களின் தங்குமிடம் மற்றும் பயணம் தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதிக்குள் அதுதொடர்பில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க