மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் கமிந்து மெண்டிஸ்

82

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரையில் இலங்கை டெஸ்ட் அணியின் நம்பிக்கைக்குரிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக உருவெடுத்திருக்கும் கமிந்து மெண்டிஸ் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் சூர்யகுமார் யாதவ்!

ICC மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலை நேற்று (05) வெளியிட்டது.

அதன்படி இந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்டவீரரான கமிந்து மெண்டிஸ் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். கமிந்து மெண்டிஸ் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் மொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் ஆடி 378 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரையில் அயர்லாந்தின் முன்னணி வீரர் மார்க் அடையர் மற்றும் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்ரி ஆகியோரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் மார்க் அடையர் அயர்லாந்து அணி ஆப்கானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்வதற்கு உதவியதன் காரணமாகவும், மேட் ஹென்ரி அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிரகாசித்தமைக்காகவும் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<