வெற்றிப் பயணத்தை தொடரும் லிவர்பூல்

86

வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் 30 ஆண்டுகளில் தனது முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது. அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 19 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு முன்னேற்றம்: ஜுவன்டஸ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ்……..

லிவர்பூல் அணி கழக உலகக் கிண்ணத்தை வெல்லும் பரபரப்பில் இருந்ததன் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டியாக இலங்கை நேரப்படி இன்று அதிகாலை லண்டன் அரங்கில் இந்தப் போட்டி நடைபெற்றது.   

எனினும் எதிரணி மைதானத்தில் லிவர்பூலுக்கு பெரிதாக சவால் இருக்கவில்லை. உபாதைக்கு உள்ளான சாடியோ மானே இன்றி போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் லிவர்பூல் அணி தாக்குதல் ஆட்டம் ஒன்றை விளையாட தவறியது. 

எனினும், 24 ஆவது நிமிடத்தில் அன்டி ரொபட்ஸனுக்கு கோல் பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் இஸ்ஸா டியோப் அதனைத் தடுத்தார்.  

இந்நிலையில் பெல்ஜியத்தைச் சேர்ந்த முன்கள வீரரான டிவொக் ஒர்ஜி பந்தை முன்னோக்கி எடுத்துச் வெல்லும்போது பின்புறமாக வந்த இஸ்ஸா டியொப் தடுக்க முயன்றதால் கீழே வீழ்த்தப்பட்டார். வீடியோ நடுவர் முறையில் தவறிழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது.

போராட்டத்தின் பின்னர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த டிபெண்டர்ஸ் அணி

2020 AFC கிண்ண தகுதிகாண் தொடரின் ஆரம்ப …….

இதன்மூலம் கிடைத்த பெனால்டியை தாழ்வாக மொஹமட் சலாஹ் உதைக்க எதிரணி கோல்காப்பாளர் லுகாஸ் பபியன்ஸ்கி தவறான திசையில் தாவ லிவர்பூல் முதல் கோலை புகுத்தியது. இது சலாஹ் லீக் போட்டிகளில் பெறும் 12ஆவது கோலாகும்.

முதல் பாதி:  லிவர்பூல் 1 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடட்

விறுவிறுப்பாக ஆரம்பமான இரண்டாவது பதியில் இரு அணிகளுக்கும் கோல்பெறும் வாய்ப்புகள் தவறின. லான்சினி வெஸ்ட் ஹாமுக்காக பதில் கோல் திருப்ப சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிட்டியபோது அது இலகுவாக தடுக்கப்பட்டது. மறுபுறம் ரொபர்டோ பர்மினோ பந்தை எதிரணி வீரர்களை முறியடித்து கடத்திச் சென்றபோதும் பபின்ஸ்கி அவரது முயற்சியை தடுத்தார்.  

எனினும், தனது வலுவான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வரும் லிவர்பூலின் தாக்குதல் ஆடத்திற்கு வெஸ் ஹாமினால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. மொஹமட் சலாஹ் பரிமாற்றிய பந்தை பெற்ற அலெக்ஸ் ஒக்ஸ்லாடே சம்பர்லின் பெனால்டி பெட்டியின் மத்தியில் இருந்து கோலை பெற்றார்.  

லிவர்பூல் அணி இம்முறை ப்ரீமியர் லீக்கில் 24 போட்டிகளில் பெறும் 23 ஆவது வெற்றி இதுவாகும். அந்த அணி ஒட்டுமொத்தமாக தொடர்ந்து 41 ப்ரீமியர் லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது. ஆர்சனல் (49) மற்றும் நொட்டின்ஹாம் பொரஸ்ட் (42) அணிகளுக்கு பின் அதிக போட்டிகளில் தோல்வியுறாமல் அந்த அணி சாதனை படைத்துள்ளது. 

இந்தப் போட்டியில் பெற்ற தோல்வியுடன் வெஸ்ட் ஹாம் அணி தொடர்ந்து 17 ஆவது இடத்தில் நீடிப்பதோடு அந்த அணி ஒரே ஒரு கோல் வித்தியாசத்திலேயே தகுதி இழப்பு நிலையை தவிர்த்து வருகிறது. 

முழு நேரம்: லிவர்பூல் 2 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடட்

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் – மொஹமட் சலாஹ் 35’ (பெனால்டி), அலெக்ஸ் ஒக்ஸ்லாடே சம்பர்லின் 52’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<