லிவர்பூல் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம்: செல்சிக்கு மற்றொரு தோல்வி

70

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் ‘பொக்சின் டே’போட்டிகளாக முக்கிய சில போட்டிகள் வியாழக்கிழமை (26) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் லெஸ்டர் சிட்டி

ட்ரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்டின் ஒரு கோல் மற்றும் இரு கோல் உதவிகளுடன் லெஸ்டர் சிட்டியை 4-0 என இலகுவாக வீழ்த்திய லிவர்பூல், ப்ரீமியல் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தனது முன்னிலையை 13 புள்ளிகளால் அதிகரித்துக் கொண்டது.  

சமநிலைகளால் ஏமாற்றம் காணும் ரியல் மெட்ரிட்: மன். யுனைடட்டுக்கு அதிர்ச்சித் தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றன………..

ரொபர்டோ பெர்மினோ (31’, 74’) இரட்டை கோல்களை பெற இரண்டாவது பாதியில் ஜேம்ஸ் மில்லர் பெற்ற கோல் இந்தப் போட்டியில் லிவர்பூல் மொத்தமாக மூன்று புள்ளிகளையும் அள்ளுவதற்கு உதவியது.  

ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெய்செஸ்டர் சிட்டி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் லிவர்பூலுடனான புள்ளிகள் இடைவெளியை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்துக் கொள்ள முடிந்திருக்கும். எனினும் ஒரு புள்ளி இடைவெளியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி இன்றை வொல்வஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.    

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பிரைட்டன்

வடக்கு லண்டனில் நடைபெற்ற பிரைட்டன் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய டொட்டன்ஹாம் அணி ப்ரீமியர் லீக்கில் நான்காவது இடத்திற்கு நெருங்கும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது

இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் டொட்டன்ஹாம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியதோடு மூன்றாவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் மூன்று புள்ளி மாத்திரமே பின்தங்கி உள்ளது

வருகை அணியான பிரைட்டன் 37 ஆவது நிமிடத்தில் அடம் வெப்ஸ்டர் மூலம் கோல் பெற்று முன்னிலையை அடைந்தது. எனினும் இரண்டாவது பாதியில் வேகமாக ஆடிய டொட்டன்ஹாம் 53 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. ஹர்ரி கேன் இடது பக்க மூலையில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.     

இந்நிலையில் டெலே அலி 72 ஆவது நிமிடத்தில் இடது பக்க மேல் மூலையில் இருந்து வெற்றி கோலை புகுத்தினார்.

பிரைட்டன் கடைசியாக ஆடிய 11 போட்டிகளிலும் வெற்றி பெறாத அணியாக 15 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

போர்ன்மௌத் எதிர் ஆர்சனல்

மைக்கெல் ஆர்டேடாவின் பயிற்சியின் கீழ் போர்ன்மௌத்துக்கு எதிராக ஆர்சனல் ஆடிய முதல் போட்டி 1-1 என்று சமநிலை பெற்றது.

போர்ன்மௌத்தின் டான் கோஸ்லிங் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் பீர் எமெரின் அபுமயங் ப்ரீமியர் லீக்கில் தனது 12 ஆவது கோலாக 63 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் அணியால் இந்தப் போட்டியை சமநிலை செய்ய முடிந்தது.  

ஆர்சனல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 24 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்தில் உள்ளது

கழக உலகக் கிண்ணம் லிவர்பூல் வசம்

ரொபார்டோ பர்மினோ மேலதிக நேரத்தில் பெற்ற கோல் …………..

செல்சி எதிர் சௌதம்ப்டன்

தனது சொந்த மைதானமான ஸ்டான்போர்ட் பிரைட்டனில் நடைபெற்ற சௌதம்ப்டன் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி 2-0 என தோல்வியை சந்தித்தது.  

இரு பாதிகளிலும் மைக்கல் ஒபபெமி மற்றும் நெதன் ரெட்மொண்ட் பெற்ற கோல்களால் செல்சி ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.    

இதன்படி செல்சி இந்த பருவத்தில் அனைத்து போட்டித் தொடர்களிலுமாக தனது சொந்த மைதானத்தில் ஆறு தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் தோல்வியை சந்தித்தபோதும் செல்சி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<