ஜப்னா வொலிபோல் லீக்கின் சம்பியனாக முடிசூடிய அரியாலை கில்லாடிகள்

Jaffna Volleyball League 2021

344
 

யாழில் நடைபெற்றுவந்த ஜப்னா வொலிபோல் லீக்கின் (Jaffna Volleyball League) இறுதிப்போட்டியில் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியை 3-2 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்திய அரியாலை கில்லாடிகள் 100 அணி சம்பியனாக முடிசூடியது.

அட்ஷயா இண்டர்நெசனலின் பிரதான அனுசரணையுடனும், ஸ்டார் பூட் ஸ்டோர்ஸ், நியூ மைத்திலி ஜுவலர்ஸ் மற்றும் சந்தோஷ் ஜுவலர்ஸின் இணை அனுசரணையுடனும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டித்தொடரில், முதல் குவாலிபையர் போட்டியில் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியிடம் தோல்விக்கண்டிருந்த போதும் இறுதிப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரியாலை கில்லாடிகள் அணி முதல் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.

>>JVL இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரியாலை கில்லாடிகள்!

போட்டியின் முதல் செட்டின் சற்று பின்னடைவைக்கொண்ட ஆரம்பத்தை அரியாலை கில்லாடிகள் அணி பெற்றிருந்த நிலையில், மிகச்சிறப்பாக ஆடி முதல் செட்டை 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய அரியாலை கில்லாடிகள் அணி 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி போட்டியை 1-1 என சமப்படுத்தியது. அடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டிலும் அபாரம் காண்பித்த அரியாலை அணி 25-19 என செட்டை கைப்பற்றி 2-1 என போட்டியில் முன்னிலைப்பெற்றது.

முதல் மூன்று செட்களும் விறுவிறுப்பாக நடைபெற்ற போதும் நான்காவது செட்டில் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி போட்டியை தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. நான்காவது செட்டை ஆவாரங்கால் அணி 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, அரியாலை அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்தது.

எனவே, போட்டியின் முக்கியமான இறுதி செட்டுக்கு மோசமான தோல்வியுடன் முகங்கொடுத்த அரியாலை கில்லாடிகள் அணி, பின்னடைவுடன் செட்டை ஆரம்பித்தது. 15 புள்ளிகளுடன் இறுதி செட் நிறைவடையும் என்ற நிலையில் 5-8 என்ற புள்ளிகள் கணக்கில் அரியாலை அணி பின்னடைவிலிருந்தது.

எவ்வாறாயினும், அதன் பின்னர் சிறப்பாக ஆடிய அரியாலை அணி, ஆவாரங்கால் அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்து. போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதிசெட்டை கைப்பற்றிய அரியாலை கில்லாடிகள் அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை தக்வைத்து, சம்பியனாக முடிசூடியது.

விருதுகள் விருது பெற்றுக்கொண்டவர்கள் பரிசுத்தொகை
சம்பியன் அரியாலை கில்லாடிகள் 100 125,000 ரூபா
இரண்டாம் இடம் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் 75,000 ரூபா

 

மூன்றாவது இடம் ரைசிங் ஐலண்ட்ஸ் 30,000 ரூபா
நான்காவது இடம் செண்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி 10,000 ரூபா
நன்நடத்தை அணி நீர்வை பசங்க 10,000 ரூபா

 

தொடர் ஆட்டநாயகன் சச்சிதாநந்தம்  கபிலக்ஷன் 3000 ரூபா
ஆட்டநாயகன் சிவனேஸ்வரன் சன்சஜன் 2000 ரூபா
சிறந்த வளர்ந்துவரும் வீரர் (Emerging Player of the tour) சிவனேஸ்வரன் சன்சஜன் 2500 ரூபா
சிறந்த அட்டேக்கர் Best Attacker) சச்சிதாநந்தம்  கபிலக்ஷன்

 

2000 ரூபா
சிறந்த செட்டர் (Best Setter) பத்மதாஸ் நிதர்ஸன் 2000 ரூபா

 

சிறந்த லிபரோ (Best Libero) வேதீஷ்வரன் கஜனன் 2000 ரூபா

 

சிறந்த ரிசிவர் (Best Receiver) சச்சிதாநந்தம் ஜனகன் 2000 ரூபா

 

சிறந்த பிளொக்கர் (Best Blocker) சச்சிதாநந்தம் ஜனகன்

 

2000 ரூபா

 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<