மெஸ்ஸியின் கடைசி நேர கோலால் பார்சிலோனா மீண்டும் முதலிடத்தில்

66

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் சரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருவமாறு, 

பார்சிலோனா எதிர் அட்லடிகோ மெட்ரிட்

லியோனல் மெஸ்ஸி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 1-0 என வெற்றியீட்டி லா லிகா புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது

ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு முன்னேற்றம்: லிவர்பூல் தொடர்ந்து ஆதிக்கம்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் ……

போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இன்னும் நான்கு நிமிடங்களே இருக்கும்போது பெனால்டி பெட்டியின் விளிம்பில் இருந்து மெஸ்ஸி போட்டியின் வெற்றி கோலை பெற்றார். மெஸ்ஸி 10 போட்டிகளிலும் பெற்ற 11 ஆவது கோலாக  இது இருந்தது.  

முன்னதாக பார்சிலோனா கோல்காப்பாளர் மார்க் அன்ட்ரே ஸ்டெஜன் இரண்டு அபார தடுப்புகளை செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ரியல் மெட்ரிட்டை கோல் வித்தியாசத்தில் பின்தள்ளி பார்சிலோனா முதலிடத்தை பிடித்தது.  

ஜுவன்டஸ் எதிர் சசுவோலோ

அனுபவ கோல்காப்பாளர் கியன்லுகி பபோன் இழைத்த தவறினால் சுசுவோலோ அணிக்கு எதிரான போட்டியை ஜுவன்டஸ் அணி 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்து ஆறுதல் அடைந்தது.

லியோனார்டோ பனுக்சி 20 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று ஜுவன்டஸை முன்னிலை பெறச் செய்தாலும் ஜெரமி பொகாவின் கோல் மூலம் சுசுவோலோ பதில் திருப்பியது.  

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆரம்பத்தில் பபோன் தடுமாற்றமடைய அதனை பயன்படுத்தி பிரான்சிஸ்கோ கெபுடோ கோல் புகுத்தினார். எனினும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 22 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பெற்றார்.  

ஜுவன்டஸ் அணி சீரி A புள்ளிப்பட்டியலில் இன்டர் மிலானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது

ஆர்சனல் எதிர் நோர்விச் சிட்டி

நோர்விச் சிட்டி அணிக்கு எதிரான போட்டியையும் ஆர்சனல் அணி சமநிலை செய்த நிலையில் அந்த அணி ப்ரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி இன்றி நீடிக்கிறது.  

தெற்காசிய விளையாட்டு விழா – கால்பந்து அட்டவணை வெளியீடு

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு ……….

ஆர்சனல் போட்டியை வலுவாக ஆரம்பித்தபோது டீமு புக்கி பெற்ற கோல் மூலம் நோர்விச் முன்னிலை பெற்றது. எனினும் கிறிஸ்டோப் சிம்மர்மன் கையில் பந்து பட ஆர்சனல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கொண்டு பிர்ரே எமரிக் அவுபமயங் பதில் கோல் திருப்பினார்

எனினும் ஆர்சனல் பின்களத்தின் தவறைப் பயன்படுத்தி டொட் கான்ட்வெல் பெற்ற கோல் மூலம் நோர்விச் மீண்டும் முன்னிலை பெற்றது. எனினும் யவுபமயங் பெற்ற மற்றொரு கோலின் உதவியோடு ஆர்சனல் புள்ளியை பகிர்ந்துகொண்டது

இந்த முடிவுடன் ஆர்சனல் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருப்பதோடு முதல் நான்கு இடங்களை விடவும் ஏழு புள்ளிகள் குறைவாக உள்ளது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<