ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு முன்னேற்றம்: லிவர்பூல் தொடர்ந்து ஆதிக்கம்

76

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (30) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.

  • ரியல் மெட்ரிட் எதிர் அலவேஸ்

பின்கள வீரர் டானி கர்வஜான் பெற்ற பிந்திய கோல் மூலம் அலவேஸ் அணிக்கு எதிரான போட்டியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற ரியல் மெட்ரிட் அணி பார்சிலோனாவிடம் இருந்து முன்னேற்றம் பெற்று லா லிகாவில் முதலித்தைப் பிடித்தது. 

சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அடுத்த சுற்றில்; லிவர்பூலுக்கு நெருக்கடி

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முக்கிய…..

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் 52 ஆவது நிமிடத்தில் ரியல் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ் தலையால் தள்ளிவிட்டு முதல் கோலை பெற்றார்

எனினும் ரியல் மெட்ரிட் விட்டுக்கொடுத்த பெனால்டி வாய்ப்பைக் கொண்டு லுகாஸ் பரஸ் 65 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். எனினும் கர்வஜால் கோல் கம்பத்திற்கு நெருங்கிய தூரத்தில் இருந்து பெற்ற கோல் மூலம் ரியல் மெட்ரிட்டின் வெற்றி உறுதியானது

இந்த வெற்றியுடன் ரியல் மெட்ரிட் 3 புள்ளி இடைவெளியில் பார்சிலோனாவிடம் இருந்து முதலிடத்தைப் பொற்றபோதும் இன்று அட்லெடிக்கோ மெட்ரிட்டை சந்திக்கும் பார்சிலோனா அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேற்றம் காணலாம்

  • லிவர்பூல் எதிர் பிரைட்டன்

கோல் காப்பாளர் அலிசன் சிவப்பு அட்டை பெற்ற நிலையில் 10 வீரர்களுடன் ஆடிய லிவர்பூல் அணி பிரைட்டன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 11 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

இதன்போது லிவர்பூல் அணி 1987 மே மற்றும் 1988 மார்ச் வரை தொடர்ச்சியாக 31 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருந்த தனது சொந்த சாதனையை சமப்படுத்திய நிலையில் அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 14 போட்டிகளில் 40 புள்ளிகளை பெற்றுள்ளது

விர்ஜில் வான் டிஜ்க் போட்டியின் ஆரம்பத்தில் (18’, 24’) ஹெடர் மூலம் பெற்ற இரட்டை கோல்களே லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தது.  

எனினும் அலிசன் தனது பெனால்டி எல்லைக்கு வெளியே வந்து பந்தை பிடித்தது தெளிவாகத் தெரிந்ததை அடுத்து நடுவரின் சிவப்பு அட்டைக்கு முகம்கொடுத்து 79 ஆவது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பதில் கோல்காப்பாளராக வந்த அட்ரியனுக்கு முன்னால் டன்க் பிரைட்டன் அணிக்கு கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தபோதும் அது வெற்றிக்கு போதவில்லை

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் நியூகாசில் யுனைடட்

ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு மற்றொரு பின்னடைவாக நியூகாசில் யுனைடட் அணிக்கு எதிரான ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.   

செயின்ட் ஜேம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் ரஹீம் ஸ்டர்லிங்கின் கோல் மூலம் சிட்டி முன்னிலை பெற்றபோதும் 3 நிமிட இடைவெளியில் ஜெட்ரோ வில்லியம்ஸ் பதில் கோல் திருப்பினார்.   

Vantage FA கிண்ண 32 அணிகள் சுற்றுப் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்…..

இரண்டாவது பாதியில் சிட்டி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 82 ஆவது நிமிடத்தில் கோல் பெற்றது. பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து கெவின் டி ப்ருய்னே அந்த அபார கோலை பெற்றார்

எனினும் வெற்றியை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த சிட்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜொன்ஜோ செல்வே 88ஆவது நிமிடத்தில் கோல் பெற்று போட்டியை சமநிலை செய்தார்.     

இதனால் சிட்டி அணி புள்ளிப்பட்டியலல் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் அதிகம் பின்தங்கியுள்ளது

  • செல்சி எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடட்

ஸ்டான்ட்போர்ட் பிரட்ஜில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி 1-0 என அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது

இரண்டாவது பாதியில் ஆரோன் கிரெஸ்வெல் வெற்றி கோலை பெற்றதன் மூலம் செல்சி ப்ரீமியர் லீக்கில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது

மட்ரிடின் வெற்றியை பரித்த PSG: Champions League அடுத்த சுற்றில் டொட்டன்ஹாம், சிட்டி

இரண்டு வார இடைவெளிக்குப் பின்……

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் ஹாம் தர இறக்கம் செய்யப்படுவதை தவிர்த்துக் கொள்ளும் நான்கு இடங்களை பெற்றுக்கொண்டதோடு தற்போது 4 ஆவது இடத்தில் இருக்கும் செல்சி அணி இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிகளை விடவும் 3 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.   

  • டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் போர்ன்மௌத்

புதிய முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோவின் கீழ் 100 வீத வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருக்கும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் போர்ன்மௌத் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என வெற்றி பெற்றது.

முதல் இரண்டாவது பாதிகளின் ஆரம்பத்தில் டெல் அல்லி இரட்டை கோல் பெற்றதன் மூலம் முன்னிலை பெற்ற டொட்டன்ஹாம் அணிக்கு முசா சிகோ 69 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்றார். எதிரணி கடைசி நிமிடங்களை அபாரமாக ஆடி இரண்டு பெற்றாலும் டொட்டன்ஹாமின் வெற்றியை அது தடுக்கவில்லை.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<